வீட்ல கோல்டன் Fish வளர்த்தது ஒரு குத்தமா?.. ஹவுஸ் ஓனரின் ஸ்ட்ரிக்ட்டான ரூல்ஸ்.. குழம்பிப்போன பெண்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தனது வீட்டில் கோல்டன் மீன் வளர்த்ததால் வீட்டின் உரிமையாளர் கூடுதல் வாடகை வசூலிப்பதாக பெண் ஒருவர் எழுதியுள்ள பதிவு நெட்டிசன்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

வீட்ல கோல்டன் Fish வளர்த்தது ஒரு குத்தமா?.. ஹவுஸ் ஓனரின் ஸ்ட்ரிக்ட்டான ரூல்ஸ்.. குழம்பிப்போன பெண்..!

Images are subject to © copyright to their respective owners.

Also Read | பிரபல தொழிலதிபருக்கு நடிகர் அமிதாப் பச்சன் கொடுத்த சர்ப்ரைஸ்.. வைரல் போஸ்ட்..!

பொதுவாக வாடகை வீட்டுக்கு குடிபெயரும்போது பலவகையான சிக்கல்களை சந்திக்க நேரிடும். குறிப்பாக வீட்டின் உரிமையாளர் விதிக்கும் கட்டுப்பாடுகளை பின்பற்றியே ஆகவேண்டும். இருப்பினும் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரியாக இந்த விதிமுறைகள் இருக்கும். ஆனால், அமெரிக்காவில் வித்தியாசமான கட்டுப்பாட்டை வீட்டின் உரிமையாளர் விதித்துள்ளதாக பெண் ஒருவர் பதிவு ஒன்றை எழுத, அது பற்றித்தான் இப்போது இணையதளங்களில் பேச்சாக இருக்கிறது.

அமெரிக்காவை சேர்ந்தவர் நிக் எனும் பெண்மணி. இவர் சமீபத்தில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடிபெயர்ந்துள்ளார். வீட்டின் வாடகை குறித்து பேசிய பின்னரே நிக் அந்த வீட்டுக்கு குடிபெயர்ந்துள்ளார். நிக் தனது வீட்டில் மீன் வளர்க்க ஆசைப்பட்டு இருக்கிறார். இந்நிலையில் கோல்டன் மீன் ஒன்றையும் வாங்கி தனது வாடகை வீட்டில் வளர்த்து வந்திருக்கிறார். இதனை கண்ட ஹவுஸ் ஓனர் அடுத்த மாதத்தில் கூடுதல் வாடகையை விதித்திருக்கிறார்.

Land lord charges Pet rent from tenant for she having golden fish

Images are subject to © copyright to their respective owners.

அதாவது கூடுதல் வாடகையாக 200 டாலரும், செல்ல பிராணிகளுக்கான வாடகை என 15 டாலரும் கட்டணமாக விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் நிக் தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய வாடகை ரசீதின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் "மீன் வளர்க்க அனுமதி உண்டு. ஆனால் ஆக்ரோஷமான வகை மீன்களை வளர்க்க கூடாது" எனவும் அந்த வீட்டின் உரிமையாளர் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Land lord charges Pet rent from tenant for she having golden fish

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் இது நெட்டிசன்களை குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது. ஒருவர் நிக்கின் இந்த பதிவில்,"இது பேராசையான செயல்" எனவும் மற்றொருவர்,"அதென்ன ஆக்ரோஷமான மீன் வகை? ஒருவேளை பிரானா-வை குறிப்பிடுகிறாரா?" என்றும் "இப்படி ஒரு கண்டீஷனை நான் கேள்விப்பட்டதே இல்லை" எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Also Read | "தோனிக்காக தான் விளையாடினேன்.. அப்புறம் தான் நாட்டுக்காக".. உருகிய சின்ன தல ரெய்னா..!

LAND LORD, CHARGES, PET, RENT, TENANT, GOLDEN FISH

மற்ற செய்திகள்