"இங்க இருந்த ஏரி எங்கப்பா".. 70 ஆண்டுகளில் இல்லாத வறட்சி.. உலக புகழ்பெற்ற ஏரியை கண்ணீருடன் கடக்கும் சுற்றுலாவாசிகள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்இத்தாலியில் இருக்கும் உலக புகழ்பெற்ற கார்டா ஏரியில் கணிசமான அளவு தண்ணீர் வற்றிப்போயிருக்கிறது. இதனால் சுற்றுலாவாசிகள் மிகுந்த கவலையடைந்திருக்கின்றனர்.
Also Read | "End-ஏ கிடையாது".. இந்தியாவின் நீளமான ரயில்.. வீடியோவை பகிர்ந்து ஆனந்த் மஹிந்திரா போட்ட வைரல் Caption..!
வெப்ப அலை
ஐரோப்பா முழுவதும் வெப்ப அலையின் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். வெப்பத்தினை தவிர்க்க அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பிரிட்டனில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவு வறட்சி ஏற்பட்டிருக்கிறது. முக்கிய நீர்நிலைகளில் நீர்ப்பிடிப்பின் அளவு கணிசமான அளவில் குறைந்திருக்கிறது. மேலும், காட்டுத்தீ போன்ற பேரிடர்கள் அரசுக்கு நெருக்கடி அளித்து வருகின்றன. இந்நிலையில் ஐரோப்பிய நாடான இத்தாலியில் உள்ள மிகப்பெரிய ஏரியான கார்டா வற்றிப்போயிருக்கிறது. இதனால் ஏரியின் அடிப்பாகத்தில் இருக்கும் பாறைகள் வெளியே தெரியும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
கார்டா ஏரி
ஐரோப்பாவின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கிறது இத்தாலி. ஐரோப்பாவில் வீசிவரும் வெப்ப அலை இத்தாலியையும் கடுமையாக பாதித்திருக்கிறது. இதன் காரணமாக கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவு வறட்சி ஏற்பட்டிருக்கிறது. மேலும், அந்நாட்டின் மிகப்பெரிய ஏரியான கார்டாவில் நீர்ப்பிடிப்பு கணிசமாக குறைந்திருக்கிறது. கடந்த 15 வருடங்களில் இல்லாத அளவுக்கு இந்த ஏரியில் நீர் இருப்பு குறைந்திருப்பதாக உள்ளூர் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
ஏரியில் நீர் இருப்பு குறைந்ததால் உள்ளே இருந்த பாறைகள் வெளியே தெரிகின்றன. ஏரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த பாறைகளில் நடந்தபடி இப்பகுதியை சோர்வோடு கண்டு செல்கின்றனர். சுற்றுலாவாசிகள் சிலர் இதுபற்றி பேசுகையில்,"நாங்கள் கடந்த ஆண்டு இங்கு வந்தோம். நீர் நிரம்பி இருந்தது. இந்த ஆண்டு பாறைகள் மட்டுமே தெரிகின்றன. சூழல் மோசமாக மாறிவிட்டது. இது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது" என்கின்றனர்.
வறட்சி
வடக்கு இத்தாலியில் பல மாதங்களாக குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு பதிவாகவில்லை. மேலும் இந்த ஆண்டு பனிப்பொழிவு 70% குறைந்திருப்பதாக உள்ளூர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. ஸ்பெயின், ஜெர்மனி, போர்ச்சுகல், பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து உட்பட பல ஐரோப்பிய நாடுகளும் இந்த கோடையில் வறட்சியை எதிர்கொண்டுவருகின்றன. இந்நாடுகள் விவசாயம் மற்றும் கப்பல் தொழில்களை முடக்கி, நீர் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த அதிகாரிகளை ஊக்குவித்துவருகின்றன.
மற்ற செய்திகள்