'வயிற்றுக்குள்' இருந்து வந்த 'ரிங்க்டோன்' சத்தம்...' அய்யோ உள்ள 'அதெல்லாம்' இருக்குமே...! 'கதறி துடித்த இளைஞர் - 'ஸ்கேன்' ரிப்போர்ட் பார்த்து 'ஃப்ரீஸ்' ஆன மருத்துவர்கள்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொசோவோவில் உள்ள பிரிஸ்டினாவைச் சேர்ந்த 33 வயதான நபர் ஒருவர், 2000-ஆம் ஆண்டு பின்னிஷ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Nokia 3310 செல்போனை விழுங்கியுள்ளார்.

'வயிற்றுக்குள்' இருந்து வந்த 'ரிங்க்டோன்' சத்தம்...' அய்யோ உள்ள 'அதெல்லாம்' இருக்குமே...! 'கதறி துடித்த இளைஞர் - 'ஸ்கேன்' ரிப்போர்ட் பார்த்து 'ஃப்ரீஸ்' ஆன மருத்துவர்கள்...!

செல்போன்கள் புழக்கத்தில் வந்த 2000 ஆண்டுகளின் தொடக்கத்தில் பெரும்பான்மையான மக்கள் நோக்கியா செல்போன்களை உபயோகித்து வந்தனர். இன்றளவும் அது பசுமையான நினைவுகளாக உள்ளது. அதன்பின்னர் தொடுதிரை ஸ்மார்ட் போன்கள் குவியவே பழைய நோக்கியா போன்கள் காலாவதி ஆனது. ஆனாலும் ஒருசில மக்கள் பழைய போன்களை உபயோகித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கொசோவோவில் உள்ள பிரிஸ்டினாவைச் சேர்ந்த 33 வயதான நபர் ஒருவர், 2000-ஆம் ஆண்டில் பின்னிஷ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட Nokia 3310 என்ற செல்போனை முழுவதுமாக விழுங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து கடுமையான வயிற்றுவலியினால் அவதிப்பட்டுள்ளார். வயிற்றுக்குள் இருந்து லேசான சத்தமும் கேட்டுள்ளது. உடனடியாக தலைநகர் பிரிஸ்டினாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அந்த நபருக்கு உடனடியாக வயிற்றில் ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. அப்போது தான் அவர் செல்போனை விழுங்கியிருப்பது தெரிய வந்தது. செல்போன் ஜீரணிக்க முடியாத அளவுக்கு பெரியது என்பதாலும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் அதன் பேட்டரியில் இருப்பதாலும் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே, உடனடியாக அந்த நபருக்கு டாக்டர் டெல்ஜாகு தலைமையிலான குழு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அறுவை சிகிச்சையின் முடிவில் அவரது வயிற்றில் இருந்து நோக்கியா செல்போனை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். அறுவை சிகிச்சைக்குப் பிறகு, டாக்டர் டெல்ஜாகு முகநூலில் அந்த நபர் விழுங்கிய நோக்கியா செல்போனின் புகைப்படங்களையும், மனிதனின் வயிற்றுக்குள் போன் இருந்தபோது எடுத்த ஸ்கேன் ரிப்போர்ட்களையும் பகிர்ந்துள்ளார்.

மற்ற செய்திகள்