'இதுக்காக ரகசிய வேலை பார்த்தவரா??.. அதிபரின் சகோதரரைப் பற்றிய புது சர்ச்சை!
முகப்பு > செய்திகள் > உலகம்வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பரவி வந்த நிலையில், அவருடைய சகோதரர் பற்றிய இன்னொரு சர்ச்சையும் எழுந்துள்ளது.
ராணுவ தளபதியை பிரான்ஹா மீன்கள் அடங்கிய தொட்டிக்குள் கட்டித் தொங்கவிட்டு, அவரை மீன்களுக்கு இரையாக்கிவிட்டு கிம் ஜாங் கொன்றதாகவும், தனக்கு துரோகம் செய்பவர்களையும், தான் சந்தேகப்படுபவர்களையும் கடந்த 2011-ஆம் ஆண்டு முதலே கிம் இவ்வாறுதான் கொன்று வருகிறார் என்றும் தென் கொரிய மற்றும் இங்கிலாந்து ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரராகிய கிம் ஜாங் நாம் அமெரிக்காவின் உளவுத்துறை அமைப்பான சிஐஏவுக்காக வேலை பார்த்திருக்கலாம் என்கிற சர்ச்சைக்குரிய செய்தியினை தனியார் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது சர்வதேச அளவில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கோலாலம்பூர் விமான நிலையத்தில், தன் முகத்தில் ரசாயன பொடியைத் தூவியதால் கொல்லப்பட்டவர்தான், கிம் ஜாங்கின் உன்னின் சகோதரர் கிம் ஜாங் நாம். இந்த கொலை தொடர்பான விசாரணை நடந்துவரும் நிலையில், கிம் ஜாங் நாம், அமெரிக்க உளவுத்துறை அமைப்பான சிஐஏவுக்காக பணியாற்றியவர் என்று வால்ஸ்ட்ரீட் பத்திரிகை செய்திகளை வெளியிட்டுள்ளது.
வடகொரியாவைத் தவிரவும் நீண்ட காலம் வெளிநாடுகளில் இருந்த கிம் ஜாங் நாம், வடகொரியாவின் ராணுவ-ராஜ்ஜிய ரகசியங்களைக் கண்டறிந்து வெளியில் கடத்தியிருக்கலாம் என்றும், சீனாவின் பாதுகாப்புத் துறையுடன் தொடர்பிருந்ததாகவும் அமெரிக்க முன்னாள் சிஐஏ அதிகாரிகள் தெரிவித்ததாக அந்தத் தகவல்கள் கூறுகின்றன.