மாமாவுக்கு மரண தண்டனை வழங்கிய கிம்.. 9 வருஷம் கழிச்சு பொதுவெளிக்கு வந்த அத்தை.. என்ன தப்பு பண்ணினார் தெரியுமா?
முகப்பு > செய்திகள் > உலகம்வடகொரியா: வடகொரிய அதிபர் கிம் தனது அத்தையின் கணவருக்கு மரண தண்டனை வழங்கினார். தற்போது 9 ஆண்டுகள் கழித்து கிம்மின் அத்தை மீண்டும் பொதுவெளியில் முதன்முறையாக தோன்றிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
உலகிலேயே மர்ம நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் வடகொரியா:
வடகொரியா என்றாலே அனைவரது புருவமும் சற்று ஏற்றம் காணும். உலகிலேயே மர்ம நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது வடகொரியா தான். தற்போது நவீன காலத்தை ஒப்பிடும் போது வடகொரிய மக்கள் இன்றளவும் 100 வருடங்கள் பின்தங்கியுள்ளனர் என்ற செய்திகள் பரவலாக இருக்கும்.
அரசு அதிகாரிகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள்:
ஆனால், ஏவுகணை சோதனை என்றால் முதலிடத்தில் இருப்பது வடகொரியா தான். தங்கள் நாட்டு பட்ஜெட்டில் நான்கில் மூன்று பங்கு ராணுவத்திற்கு ஒதுக்கும் ஒரே நாடும் இது தான். இந்நிலையில் வடகொரியாவின் மக்களுக்கும் சரி, அரசு அதிகாரிகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும். அவர்களுக்கு மட்டுமில்லாமல் வடகொரிய அதிபர் கிம்மை தவிர அவரின் மனைவி, உறவினர் என அனைவரும் அந்த விதிகளுக்கு உட்பட்டே நடக்க வேண்டும்.
கிம் கியாங்கின் கணவர் ஜாங் சாங்குக்கு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை:
அப்படி யாராவது ஏதாவது தவறு செய்தல் கண்டிப்பதோடு மட்டுமல்லாமல் மரண தண்டனை வரை செல்லுமாம். அதுபோன்ற ஒரு மரண தண்டனை தான் கடந்த 2013-ஆம் ஆண்டு கிம் கியாங்கின் கணவர் ஜாங் சாங்குக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இவர் கிம் ஜாங்கின் தந்தையான முன்னாள் வடகொரிய தலைவர் கிம் ஜாங் 2-வின் சகோதரி ஆவார்.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு 9 ஆண்டுகள் கழித்து பொதுவெளியில் வந்த கிம் ஜாங்கின் அத்தை:
இவருக்கு அரசைக் கவிழ்க்க வழிகாட்டியாக இருந்த தேசதுரோக குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கணவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு 9 ஆண்டுகள் ஆன நிலையில் கிம் ஜாங்கின் அத்தை இரண்டாண்டுகளுக்கு பின்னர் பொது வெளியில் முதல் முறையாக தோன்றியுள்ளார்.
வடகொரிய தலைவர் கிம் ஜாங் தனது மனைவி மற்றும் அத்தையுடன் கடந்த செவ்வாய்கிழமை சந்திரப் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மற்ற செய்திகள்