இப்போ நாம 'பண்ண' போற விஷயம்... 'மத்த நாடுகளுக்கு ஈரக்குலைய நடுங்க வைக்கும்...' 'கிம் போட்ட அடுத்த ஸ்கெட்ச்...' - இனிமேல் மனசுல கூட 'அப்படி' நினைச்சு பார்க்க கூடாது...!
முகப்பு > செய்திகள் > உலகம்வடகொரிய அரசு மக்களின் வாழ்வாதாரத்தை காட்டிலும் அதிக அக்கறை கொள்வது வடக்கொரிய நாட்டின் பாதுகாப்பில் தான் என்பது உலகம் அறிந்தது.
இதனை மீண்டும் நிரூபிக்கும் வகையில் வடகொரிய அதிபர் கிம் அறிவித்துள்ள செய்தி உலக நாடுகளை உற்றுநோக்க செய்துள்ளது.
வடக்கொரியாவின் பாதுகாப்பு மேம்பாட்டுக் கண்காட்சியில் வடகொரிய அதிபர் கிம் பேசும்போது, 'வடக்கொரியா உருவாக்கும் ஏவுகனைகளும், அதன் பரிசோதனைகளும் நம் நாட்டின் தற்காப்புக்காக தான். இதற்கு இரு நாடுகள் தான் முக்கிய காரணம்.
தென்கொரியாவின் ஆயுதக் குவிப்பும், அமெரிக்காவின் விரோதப் போக்குமே வடகொரியா தனது ராணுவத்தை மேலும் மேம்படுத்தக் காரணமாகி இருக்கிறது. நாம் எந்த நாட்டாலும் வீழ்த்த முடியாத ராணுவத்தை உருவாக்கப் போகிறோம்.
வடகொரியா ஒருபோதும் போரை விரும்பாது. நம் நாட்டின் ராணுவ பலத்தை அதிகரிக்கவே அணு ஆயுத தளவாடங்களை உருவாக்குகிறோம். நாம் வலிமையாக இருக்க வேண்டும். நம் நாடு எதிர்கொள்ளும் ராணுவ அச்சுறுத்தல்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பார்த்ததை விட வித்தியாசமானது' எனத் தெரிவித்துள்ளார் கிம்.
என்னதான் உலக நாடுகள் ஏவுகணை சோதனைகளை நடத்தக் கூடாது என்று கூறினாலும் வடகொரிய தற்காப்பு என்று சொல்லி மறைமுகமாக உலகநாடுகளை பயம்முறுத்த பல்வேறு ஏவுகணை, அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. வடகொரியாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் வடகொரியாவின் இந்த போக்கு மாறுவதாக இல்லை. வடகொரியா செய்வது தான் சரி என்ற ரீதியில் தற்போது அதிபர் கிம் பேசிய இந்த செய்தியும் அமைத்துள்ளது உலகநாடுகளுக்கு மேலும் நெருக்கடியான சூழலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
அமெரிக்கா வடகொரியாவின் ஏவுகணை சோதனையை தடுக்கும் விதமாகவும், கண்டிக்கும் விதமாகவும் பல்வேறு பொருளாதாரத் தடைகளை அந்நாட்டின் மீது விதித்துள்ளது. ஆனால், வடகொரியா அதை கண்டுகொள்ளாமல் நான் பிடித்த முயலுக்கு மூன்று காலு என்ற மேனிக்கு நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்