‘எதிர்பாராம நடந்திருச்சி மன்னிச்சிருங்க’.. அரிதிலும் அரிது.. மன்னிப்பு கேட்ட ‘வடகொரிய’ அதிபர்.. காரணம் என்ன..?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரியக் கடற்பகுதியில் தென்கொரியாவை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதற்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் மன்னிப்பு கேட்டுள்ளார்.

‘எதிர்பாராம நடந்திருச்சி மன்னிச்சிருங்க’.. அரிதிலும் அரிது.. மன்னிப்பு கேட்ட ‘வடகொரிய’ அதிபர்.. காரணம் என்ன..?

பல ஆண்டுகளாக தென்கொரியாவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே இணக்கமான உறவு இல்லை. இரு நாடுகளுக்கிடையே தீராப்பகை நிலவி வருகிறது. கடந்த ஜீன் மாதம் வடகொரிய தலைமைக்கு எதிராக கடுமையாக விமர்சித்து துண்டு பிரசுரங்கள் நிரப்பப்பட்ட பலூன்களை வடகொரியாவுக்குள் தென்கொரியா அனுப்பியது.

இந்த நிலையில் வடகொரியா எல்லைக்கு 10 கிமீ தொலைவில் யியோன்பியோங் (Yeonpyeong) தீவுக்கு அருகே 47 வயதான தென்கொரியாவை சேர்ந்த மீன்வளத்துறை அதிகாரி கடந்த திங்கள்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். திடீரென அவர் மாயமானார். இதனை அடுத்து அந்த படகில் இருந்து அவரது ஷீக்களை விட்டு சென்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் வடகொரியாவுக்குள் ஊடுருவ முயன்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Kim Jong-un apologises for killing of South Korean official

இதனை அடுத்து கடந்த செவ்வாய்கிழமை அவரை வடகொரிய துருப்புகள் விசாரணை நடத்தி கடற்பகுதியில் சுட்டுக்கொன்றுள்ளார். பின்னர் அவரது உடலை எண்ணெய் ஊற்றி எரித்துள்ளனர். இதனை தென்கொரிய ராணுவம் உறுதி செய்துள்ளது. இந்த செயலால் இரு நாட்டு எல்லையில் பெரும் பதற்றம் நிலவியது. வடகொரியாவின் இந்த செயலுக்கு தென்கொரியா கடும் கண்டனம் தெரிவித்தது. இதனை அடுத்து இதற்கு சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க வேண்டும் என தென்கொரியா வலியுறுத்தி வந்தது.

இந்த நிலையில் தென்கொரிய வீரர் கொல்லப்பட்டதற்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் மன்னிப்பு கோரியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. அதில்,‘தென்கொரியாவைச் சேர்ந்த மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் கொரோனா எச்சரிக்கை நடவடிக்கையாக வடகொரியாவால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் உடல் கடலில் எரிந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் இத்தாக்குதலுக்கு வடகொரியா அதிபர் கிம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இது எதிர்பாராத மற்றும் அவமானகரமான நிகழ்வு என்று அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்’ என தென்கொரிய அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வடகொரிய அதிபர் மன்னிப்பு கேட்பது என்பது அரிதான செயல் என சொல்லப்படுகிறது.

Kim Jong-un apologises for killing of South Korean official

மற்ற செய்திகள்