''கிம் உயிரோடு தான் இருக்கிறார்...'' ''ஆனால் எந்த நிலையில் இருக்கிறார் தெரியுமா?...'' 'வடகொரிய முன்னாள் தூதரக அதிகாரி அளித்த தகவல்...'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உயிரோடு தான் இருக்கிறார் என்றும் ஆனால் அவரால் நிற்கவோ, நடக்கவோ முடியாது என்றும் அந்நாட்டு முன்னாள் தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.

''கிம் உயிரோடு தான் இருக்கிறார்...'' ''ஆனால் எந்த நிலையில் இருக்கிறார் தெரியுமா?...'' 'வடகொரிய முன்னாள் தூதரக அதிகாரி அளித்த தகவல்...'

வடகொரியாவில் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி, வட கொரியாவின் தந்தை என்று அழைக்கப்படும் கிம் இல் சங்கின் பிறந்தநாள் விழாவில் கிம் ஜாங் உன் கலந்துகொள்ளவில்லை. இதைத்தொடர்ந்தே அவரைப்பற்றி வதந்திகள் பரவத்தொடங்கின.

கிம், இதய கோளாரால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாக சில செய்திகள் வெளியாகின. இருதய சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும் அவர் மூளைச்சாவு அடைந்து விட்டார் என்றம் பல்வேறு தகவல்கள் வெளியாகின.

கிம் உடல்நிலை குறித்து மற்ற நாடுகள் பல்வேறு தகவல்கள் வெளியிட்டு வந்த நிலையில் தென்கொரிய அவர் நலமுடன் இருப்பதாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில் வடகொரியாவில் இருந்து வெளியேறி தென்கொரியாவில் வாழ்ந்து வரும் முன்னாள் தூதரக அதிகாரி தே யோங் ஹோ தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்று அளித்த பேட்டியில், “கிம் உயிருடன் தான் இருக்கிறார். ஆனால் அவரால் தானாக எழுந்து நிற்கவோ, நடக்கவோ முடியாது“ எனத் தெரிவித்துள்ளார்.