'உலகையே' புரட்டிப்போட்ட 'டிக்டாக்' செயலியின் 'CEO' எடுத்த 'அதிர்ச்சி' முடிவு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் தேசப் பாதுகாப்பு கருதி டிக்டாக் நிறுவனம் மற்றும் பைட் டான்ஸ் நிறுவனத்துடன் எந்த ஒரு தகவலையும் இனி பகிரக் கூடாது என்று அந்த செயலிக்கு தடை விதிக்கும் விதமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டு கடந்த 7ம் தேதி கையெழுத்திட்டார்.

'உலகையே' புரட்டிப்போட்ட 'டிக்டாக்' செயலியின் 'CEO' எடுத்த 'அதிர்ச்சி' முடிவு!

வரும் செப்டம்பர் 20ஆம் தேதி அமலுக்கு வரவுள்ள இந்த உத்தரவையடுத்து டிக்டாக் நிறுவனத்தின் சொத்துக்களை 90 நாட்களுக்கு விற்பதற்கு கெடு விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்த முடிவுக்கு எதிராக டிக்டாக் ஊழியர் ஒருவர் சமீபத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், டிக்டாக் முதன்மை செயல் அதிகாரி கெவின் மேயர் ஊழியர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பி விட்டு தன்னுடைய வேலையையும் ராஜினாமா செய்துள்ளார்.

அந்த கடிதத்தில் கனத்த இதயத்துடன் நிறுவனத்தை விட்டு வெளியேற முடிவு செய்தை அனைவருக்கும் தெரியப்படுத்த விரும்புவதாக தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் மாதம் கெவின் மையமாகக் கொண்ட தலைமையிடமாகக் கொண்ட பைனான்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார். அதற்கு முன்னதாக டிஸ்னி நிறுவனத்தின் நீண்ட காலமாக பணியாற்றிய இவர் டிஸ்னி நிறுவனத்தின் சர்வதேச நுகர்வோர் மற்றும் சேவை வர்த்தக பிரிவின் அனுபவம் மிக்க தலைவராக பணியாற்றினார் என்று டிக்டாக் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்