‘கைக்குழந்தையுடன்’ நாடாளுமன்றத்துக்கு வந்த.. ‘பெண் எம்பிக்கு’ நடந்த அதிர்ச்சி சம்பவம்..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கென்யாவில் தனது கைக்குழந்தையுடன் நாடாளுமன்றத்துக்கு வந்த பெண் எம்பியை துணை சபாநாயகர் வெளியேற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘கைக்குழந்தையுடன்’ நாடாளுமன்றத்துக்கு வந்த.. ‘பெண் எம்பிக்கு’ நடந்த அதிர்ச்சி சம்பவம்..

கென்யாவில் எம்பியாக இருக்கும் சுலைக்கா ஹசன் என்பருக்கு 5 மாதக் கைக்குழந்தை உட்பட 3 குழந்தைகள் உள்ளன. நேற்று நாடாளுமன்றத்திற்கு செல்வதற்கு முன் தனது  கைக்குழந்தையை உறவினர்கள், நண்பர்கள் யாரிமும் விட்டுச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் வேறு வழியின்றி அவர் நாடாளுமன்றத்துக்கு குழந்தையுடனேயே சென்றுள்ளார்.

நாடாளுமன்றத்தில் அவரை குழந்தையுடன் பார்த்த காவலர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஒருவழியாக அவர்களை சமாளித்து சுலைக்கா உள்ளே வந்து அமர அவையும் தொடங்கியுள்ளது. அப்போது அவர் குழந்தையுடன் இருப்பதைப் பார்த்த துணை சபாநாயகர் கிறிஸ்டோபர் குழந்தையை வேறு யாரிடமாவது ஒப்படைத்துவிட்டு வருமாறு கூறியுள்ளார். துணை சபாநாயகருக்கு ஆதரவாக சில ஆண் உறுப்பினர்களும் சுலைக்கா அவைக்கு குழந்தையை அழைத்து வந்ததைக் கடுமையாக விமர்சித்துள்ளனர். சுலைக்காவுக்கு ஆதரவாகவும் சிலர் குரல் கொடுத்துள்ளனர். இந்த அமளியைத் தொடர்ந்து அவர் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள சுலைக்கா, “தனியார் நிறுவனங்களில் உள்ளதுபோல குழந்தைகளைப் பராமரிப்பதற்கு தனியாக ஒரு பகுதி நாடாளுமன்றத்தில் இருந்திருந்தால் குழந்தையை அதில் விட்டிருப்பேன். ஆனால் அப்படி எதுவுமே இங்கு இல்லை. நாட்டிற்கு உதாரணமாக இருக்க வேண்டிய நாடாளுமன்றத்திலேயே நிலைமை இப்படி இருக்கிறது. பெண்கள் எல்லாத்துறைகளிலும் வரவேண்டும்  என நினைக்கும் அரசு அதற்கான வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

KENYA, PARLIAMENT, WOMAN, MP, INFANT, BABY, SHOCKING