"'அவரு' ஏற்கனவே இறந்துட்டாரு..." அறிவிக்கப்பட்ட '3' மணி நேரம் கழித்து... காத்திருந்த 'அதிர்ச்சி' சம்பவம்!!..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கென்யாவின் கெரிச்சோ என்னும் பகுதியை சேர்ந்தவர் பீட்டர் ஹிகன். 32 வயதான இவர், சில தினங்களுக்கு முன் தனது வீட்டில் வைத்து திடீரென சரிந்து விழுந்துள்ளார்.

"'அவரு' ஏற்கனவே இறந்துட்டாரு..." அறிவிக்கப்பட்ட '3' மணி நேரம் கழித்து... காத்திருந்த 'அதிர்ச்சி' சம்பவம்!!..

இதனால் அவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஏற்கனவே அவருக்கு வயிற்று வலியால் பிரச்சனைகள் இருந்து வந்துள்ள நிலையில், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக செவிலியர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அவரது உடலை மருத்துவமனையின் சவக்கிடங்கில் வைத்துள்ளனர்.

இறந்த உடலை பாதுகாக்கும் செயல் முறைக்கு வேண்டி மருத்துவ ஊழியர்கள் பீட்டரின் வலது காலில் கீறல் ஒன்றை ஏற்படுத்திய மறுகணமே ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். காலில் ஏற்பட்ட காயத்தால் கத்தி அலறிய படியே எழுந்துள்ளார் பீட்டர். அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்ட 3 மணி நேரம் கழித்து இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

இது தொடர்பாக பீட்டரின் இளைய சகோதரர் தெரிவிக்கையில், 'மாலையில் சுமார் 5:30 மணியளவில் அவரை மருத்துவமனையில் சேர்த்தோம். 7 : 30 மணியளவில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்' என கூறினார். இரவு 10:30 மணியளவில் பீட்டருக்கு சுயநினைவு திரும்பியுள்ளது.

இதுகுறித்து பீட்டர் கூறுகையில், 'நான் சுயநினைவு அடைந்த போது எங்கு இருந்தேன் என்று எனக்கே தெரியவில்லை. ஆனால், என் உயிரை காப்பாற்றியதற்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். எனது வாழ்நாள் முழுவதும் இறைவனுக்கு எனது சேவையை செய்வேன்' என மகிழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

உயிருடன் இருந்தவரை இறந்ததாக அறிவித்த மருத்துவமனை நிர்வாகம் மீது பீட்டரின் குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர். ஆனால், மருத்துவமனையில் உள்ள மருத்துவர் ஒருவர், 'பீட்டர் இறந்ததாக அவரது உறவினர்களே கூறி அவரை சவக்கிடங்கிற்கு எடுத்துச் சென்றனர். இறந்ததற்கான சான்றிதழ் வாங்கக் கூட யாரும் காத்திருக்கவில்லை' என தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்த உண்மைத்தன்மை என்ன என்பது குறித்தும், யார் மீது தவறு என்பது குறித்தும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

மற்ற செய்திகள்