"'கிறிஸ்துமஸ்'க்கு முன்னாடி இப்டி ஆயிடுச்சு... என்னால தான் எல்லாமே..." - 'செக்ஸ்' பொம்மை-யை மணந்த 'பாடி பில்டர்'... வருத்தத்துடன் பகிர்ந்த 'தகவல்'!!!
முகப்பு > செய்திகள் > உலகம்கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த யூரி டோலோச்கோ (Yurii Tolochko) என்னும் பாடி பில்டர் ஒருவர், 'மார்கோ' எனப்படும் செக்ஸ் பொம்மை ஒன்றை கடந்த நவம்பர் மாத இறுதியில் திருமணம் செய்திருந்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு மார்கோவை சந்தித்த யூரி, அதனுடன் 8 மாதங்கள் உறவில் இருந்த நிலையில், மார்ச் மாதம் அந்த பொம்மையுடன் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால், கொரோனா தொற்று காரணமாக திருமணம் தள்ளிப் போன நிலையில், ஒரு வழியாக நவம்பர் மாதம் தனது காதலியை கரம் பிடித்திருந்தார்.
செக்ஸ் பொம்மை ஒன்றை திருமணம் செய்து கொண்ட பாடி பில்டர் குறித்த செய்தி உலகெங்கிலும் அதிகம் பரவியிருந்த நிலையில், அதனுடன் அடிக்கடி வெளியே செல்வது என யூரி பொழுதை கழித்து வந்திருந்தார். அது மட்டுமில்லாமல், அவ்வப்போது இருவரும் இருக்கும் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனிடையே, தனது காதலி மார்கோ குறித்து துயரமான தகவல் ஒன்றை யூரி தற்போது பகிர்ந்துள்ளார்.
கிறிஸ்துமஸ் திருநாளிற்கு முன்பாக தனது காதலி மார்கோவை தான் தெரியாமல் உடைத்து விட்டதாக தெரிவித்த யூரி, மார்கோ இப்போது பழுது பார்க்க வேண்டி, கடை ஒன்றில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமில்லாமல், திருமணமாகி தங்களின் முதல் கிறிஸ்துமஸ் நாளை சிறப்பாக கொண்டாட காத்திருந்த போது, தனது தவறால் அது நடக்க முடியாமல் போனது என்றும் யூரி குறிப்பிட்டுள்ளார். 'வேறொரு நகரத்தில் மார்கோ தற்போது இருக்கிறார். அவர் எப்போது குணமடைந்து திரும்ப வருகிறாரோ, அது தான் எங்கள் இருவருக்கும் மிகப்பெரிய பரிசாக இருக்கும்' எனவும் யூரி தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்