Battery Mobile Logo Top

இவ்வளவு பெரிய கப்பல்ல இருக்கும் குட்டி அறை.. சுவாரஸ்ய பின்னணியை வெளியிட்ட பெண் ஊழியர்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல்களில் ஒன்றில் பணிபுரிந்து வரும் இளம்பெண் ஒருவர் அதே கப்பலில் உள்ள மிகச்சிறிய அறையில் வசித்து வருகிறார். இதற்கு அவர் சொல்லும் காரணம் தான் பலரையும் வியப்படைய செய்திருக்கிறது.

இவ்வளவு பெரிய கப்பல்ல இருக்கும் குட்டி அறை.. சுவாரஸ்ய பின்னணியை வெளியிட்ட பெண் ஊழியர்..!

Also Read | உலகத்துல எல்லாம் அழிஞ்சு போனாலும் இந்த வால்ட்-க்கு ஒண்ணுமே ஆகாது.. பாத்து பாத்து கட்டிருக்காங்க.. அப்படி இதுக்குள்ள என்ன தான் இருக்கு.?

வீடு கட்டுவதாக இருந்தாலும் சரி, புதிய வீட்டுக்கு செல்வதாக இருந்தாலும் சரி மனிதர்கள் பெரும்பாலும் நன்கு பெரிதான இடங்களையே தெர்ந்தெடுக்கின்றனர். இடப்புழக்கம் அதிகம் வேண்டும் என்ற எண்ணம் பலரிடத்தில் இருந்தாலும் சமீப காலத்தில் இந்த சிந்தனை மாற்றம் கண்டிருக்கிறது. காம்பாக்ட் ஹவுஸ் எனும் சிறிய வீடுகள் நோக்கி மக்கள் நகர துவங்கியுள்ளனர். ஒரே அறையை பல பகுதிகளாக பிரித்து கியூட்டாக தங்களுக்கு தகுந்தபடி வடிவமைத்துக்கொள்கிறார்கள். அந்த வகையில் கெய்லி டோமினி சிம் என்ற பெண் உலகின் மிகப்பெரிய கப்பல்களில் ஒன்றான Royal Caribbean's Wonder of the Seas-ல் பணிபுரிந்து வருகிறார். இந்த கப்பலில் இருக்கும் இவருடைய அறையின் அளவு தான் பலரையும் திகைப்படைய செய்திருக்கிறது.

Kayleigh Dominey works on Wonder of the Seas but live in tiny room

பிரம்மாண்ட கப்பல்

உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல்களில் ஒன்றாக கருதப்படுகிறது Royal Caribbean's Wonder of the Seas. உள்ளே விளையாட்டு பகுதி, தீம் பார்க், ஹை டெக் உணவகங்கள் என பூலோக சொர்க்கம் போல இருக்கும் இக்கப்பலில் பணிபுரிந்து வருகிறார் கெய்லி டோமினி சிம். இங்கு அவரது அறையை மிகவும் சிறியதாக இவரே வடிவமைத்திருக்கிறார். இவருக்காக ஒதுக்கப்பட்ட அறையில் இருந்து சிறிய அறையை தேர்ந்தெடுத்திருக்கிறார்.

Kayleigh Dominey works on Wonder of the Seas but live in tiny room

இந்த அறையில் தனது தோழியுடன் தங்கியுள்ளார் கெய்லி. இதற்குள் சிறிய குளியலறை ஒன்றும் இருக்கிறது. அதற்குள்ளேயே கழிவறையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் இரண்டு அடுக்கு படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் வாயிலை துணிகளைக்கொண்டு நுழைவு பகுதியையையும் சிறியதாக மாற்றியுள்ளார் கெய்லி.

Kayleigh Dominey works on Wonder of the Seas but live in tiny room

காரணம் என்ன?

கெய்லி இந்த கப்பலில் ஆகஸ்டு மாதம் வரையில் பணிபுரிய இருக்கிறார். அதுவரையில் இந்த அறையில் தான் தங்க இருப்பதாக கூறுகிறார் இவர். தன்னுடைய பொருட்களை மேஜைக்கு அடியே வைத்துக்கொள்ளும் இவர், இப்படியான இடம் தான் தனக்கு பிடித்திருப்பதாக கூறுகிறார். மேலும், ஒவ்வொரு தேவைகளுக்கும் தனித்தனியாக செல்ல தனக்கு விருப்பமில்லை எனவும் அதனால் தான் இருக்கும் இடத்துக்கே அனைத்தையும் கொண்டுவந்துவிட்டதாக கூறுகிறார்.

Kayleigh Dominey works on Wonder of the Seas but live in tiny room

தன்னுடைய கடல் பயண வீடியோக்களை கெய்லி தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இதனால் ஏராளமான மக்கள் இவரை சமூக வலை தளங்கள் வாயிலாக பின்தொடர்ந்து வருகின்றனர்.

Also Read | அமெரிக்காவின் பாதுகாக்கப்பட்ட இடத்துக்குள்ள நுழைஞ்ச ட்ரக்.. டாப் லெவல் அதிகாரி எல்லாரும் கூடிட்டாங்க.. டிரைவர் சொன்னதை கேட்டு கடுப்பான காவல்துறை.!

TINY ROOM, SHIP, WONDER OF THE SEAS, CRUISE SHIP

மற்ற செய்திகள்