Elon Musk : அமெரிக்க பாடகர் கன்யே வெஸ்ட் ட்விட்டர் கணக்கு முடக்கம்.. எலான் மஸ்க் பரபரப்பு விளக்கம்.!!
முகப்பு > செய்திகள் > உலகம்உலக பணக்காரர்களுள் ஒருவரான எலான் மஸ்க், உலகத் தொழில்நுட்ப வல்லுனர்களில் முன்னோடியாகவும் திகழ்கிறார்.
அண்மையில் twitter உரிமையாளராக மாறிய எலான் மஸ்க், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகியவற்றை ஏற்கனவே நடத்தி வருகிறார். தற்போது எலான் மஸ்கின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் தொழில்நுட்ப உலகத்தில் பெரும் எதிர்பார்ப்பை எப்போதுமே உருவாக்கி வருகிறது.
இதனிடையே வன்முறைகளை தூண்டுவதற்கு எதிரான விதிகளை மீறினார் என கன்யா வெஸ்ட்டின் ட்விட்டர் பக்கம் நீக்கப்பட்டது குறித்த விஷயம் பரபரப்பானை அடுத்து, இதற்கு எலான் மஸ்க் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அதன்படி பிரபல அமெரிக்க பாடகர் கன்யா வெஸ்ட்டின் ட்விட்டர் விதிமுறைகளை மீறியதன் காரணமாக 2 மாதங்களுக்கு முன்னர் நீக்கப்பட்டு பின்னர் மீண்டது, இந்த நிலையில் திரும்பவும் அவரது கணக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கேள்வி எழுப்பப் பட்டதற்கு விதிமுறை மீறல் என்கிற பதிலை எலான் மஸ்க் அளித்துள்ளார்.
ஏற்கனவே நிகழ்ச்சி ஒன்றின் நேரலையில் தனக்கு ஹிட்லரையும் நாஜி படைகளையும் பிடிக்கும் என்று கன்யா சொல்லியிருந்த கூற்று பரபரப்பான நிலையில் கன்யா வெஸ்ட்டின் ட்விட்டர் பக்கம் நீக்கப்பட்டதாக ட்விட்டர் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது மீண்டும் அவரது பக்கம் முடக்கப்பட்டது தொடர்பான கேள்வியை நெட்டிசன் ஒருவர் கேட்க, இதற்கு ட்விட்டர் சிஇஓ எலான் மஸ்க், “என்னால் முடிந்தவரை நான் முயன்றேன்.. ஆனாலும் வன்முறையைத் தூண்டுவதற்கு எதிரான ட்விட்டரின் விதிமுறைகளை அவர் திரும்பவும் மீறியிருக்கிறாரே..” என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் உலக அளவில் நெட்டிசன்களால் பேசப்பட்டு வருகிறது.
மற்ற செய்திகள்