‘2-வது முறையாக வெற்றிப்பெற்ற ஜஸ்டின்’... ‘இருந்தும் முன்பைவிட குறைவு'... விவரம் உள்ளே!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கனடா நாட்டின் நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி, மீண்டும் வெற்றிப்பெற்றிருக்கிறது.

‘2-வது முறையாக வெற்றிப்பெற்ற ஜஸ்டின்’... ‘இருந்தும் முன்பைவிட குறைவு'... விவரம் உள்ளே!

உலகளவில், முற்போக்கு சிந்தனையுள்ள தலைவர்களில் ஒருவராக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பார்க்கப்பட்டு வருகிறார். இந்நிலையில், அவரது பதவிக்காலம் முடிய உள்ளதையொட்டி, கடந்த திங்கள்கிழமையன்று தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 338 இடங்களுக்கு நடைப்பெற்ற தேர்தலில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி, 156 இடங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும், பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைவிட, 14 இடங்கள் குறைவாகவே, ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கிடைத்துள்ளது.

இதனால் ஜஸ்டின் ட்ரூடோ, மைனாரிட்டி ஆட்சியை அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. பெரும்பான்மைக்கு 170 இடங்கள் தேவை என்ற நிலையில், அந்த எண்ணிக்கையை பெற சிறிய கட்சிகளின் உதவியை நாட உள்ளதாக தெரிகிறது. இந்திய வம்சாவளியினரான ஜக்மீத் சிங்  தலைமையிலான புதிய ஜனநாயக கட்சி குறிப்பிடத்தக்க இடங்களை வென்றிருப்பதால், அக்கட்சியின் உதவியை நாட இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2015-ல், ஜஸ்டின் ட்ரூடோ கட்சி 184 இடங்களில் வெற்றிப்பெற்றிருந்தது.

தனியார் நிறுவனம் மீதான ஊழல் வழக்கை விசாரிக்க தடை விதித்தது மற்றும் இனவெறியை தூண்டும் வகையிலான அவரது பழைய புகைப்படங்கள் வெளியானது ஆகியவை, இந்த தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோவின் செல்வாக்கு சரிய காரணமாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் எதிர்கட்சியான ஆண்ட்ரூ ஷீர் கன்சர்வேட்டிவ் கட்சி, கடந்த முறையை விட அதிக இடங்களில், சுமார் 121 இடங்களில் வென்றுள்ளது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடாக கனடா உள்ளது குறிப்பிடத்தக்கது.

JUSTINTRUDEAU