இந்த சீஸனோட 'வின்னர்' யாருன்னா... 'பெயர' கேட்ட உடனே தெரிஞ்சு போச்சு 'எந்த வம்சாவளி' காரர்னு... - மாஸ்டர் செஃப் ப்ரோக்ராமில் 'மாஸ்' காட்டிய சாம்பியன்...!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜஸ்டின் நாராயண் என்பவர் வெற்றிப் பெற்றுள்ளார்.
சமையல் தொடர்பான நிகழ்ச்சிகளில் ஆஸ்திரேலியாவில் நடக்கும் MasterChef trophy நிகழ்ச்சி தான் உலக அளவில் அதிக ரசிகர்களை பெற்றுள்ள நிகழ்ச்சி. மிகவும் பிரபலமான இந்த நிகழ்ச்சியின் பதிமூன்றாவது சீசனின் இறுதிப் போட்டி நேற்று (13-07-2021) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜஸ்டின் நாராயண் மற்றும் வங்கதேச வம்சாவளியைச் சேர்ந்த கிஷ்வர் சவுத்ரி, ஆஸ்திரேலியாவை சேர்ந்த Pete Campbell ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
யார் ஜெயிக்க போகிறார்கள் என்று உலக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் ஜஸ்டின் நாராயண் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இருபத்து ஏழு வயதாகும் ஜஸ்டின் நாராயண் MasterChef trophy 13-வது சாம்பியன் பட்டத்தை வென்று ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.
அதோடு மட்டுமல்லாமல், முதல் பரிசாக இந்திய மதிப்பின்படி 1.86 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து குவிந்து வருகிறது.
மற்ற செய்திகள்