'டிசம்பர் 21'... '397 வருசத்துக்கு பின்பு வானில் நடக்க போகும் அற்புதம்'... இப்போ மிஸ் பண்ணினா '2080'ல தான்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கிரகங்களாக இருப்பவை வியாழன் மற்றும் சனி. இந்த இரண்டு கிரகங்களும் நெருக்கமாக வர இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் ஆச்சரியமும், வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த நிகழ்வானது 397 வருடங்களுக்குப் பிறகு நடக்க இருக்கிறது. எனவே இது கிரகங்களின் மிகப்பெரிய இணைப்பு என வான்வெளி அறிஞர்கள் கூறியுள்ளார்கள்.

'டிசம்பர் 21'... '397 வருசத்துக்கு பின்பு வானில் நடக்க போகும் அற்புதம்'... இப்போ மிஸ் பண்ணினா '2080'ல தான்!

கடந்த 1623ம் ஆண்டு அற்புத காட்சிகளாக வியாழன் மற்றும் சனி ஆகிய இரண்டு கிரகங்களும் அருகில் வந்ததாகவும், அவை பார்ப்பதற்குச் சிறிய நட்சத்திரங்கள் போல இருந்ததாகவும் கூறப்படுகிறது. வரும் டிசம்பர் 21ம் தேதி உலகின் தென்மேற்கு பகுதியிலிருந்து இந்த அரிய நிகழ்வைப் பார்க்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. சரியாக 5.28 மணியிலிருந்து 7.12 மணி வரை இது நிகழவுள்ளது.

இதற்குப் பிறகு இதுபோன்ற காட்சி அடுத்ததாக வரும் 2080ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி நிகழும் எனவும், ஆனால் அந்த நேரம் டிசம்பர் 21ம் தேதி நடப்பதைப் போல நெருக்கமாகக் காணப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்