'கொரோனா' எங்க மேல ஏன் இவ்வளவு கோபம்'?... 'யாருக்கு யார் ஆறுதல் சொல்றது'...'நொறுங்கி போன அமெரிக்கா'... 'ஒரே நாளில் புரட்டி போட்ட பலி'
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனாவிற்கு அமெரிக்கா மீது என்ன கோபமோ தெரியவில்லை, அந்த அளவிற்கு அமெரிக்கவில் கொரோனா ருத்திர தாண்டவம் ஆடி வருகிறது.
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா, உலகின் பல நாடுகளை ஆட்டம் காண வைத்துள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 2 லட்சத்து 39 ஆயிரத்து 566 பேர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. தினம் தினம் அங்கு பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்ட செல்கிறது.
இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் 11 லட்சத்து 31 ஆயிரத்து 30 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் 36 ஆயிரத்து 7 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அமெரிக்க மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நமது நாட்டில் என்ன தான் நடக்கிறது என்பது தான் பல மக்களின் கேள்வியாக உள்ளது. மருத்துவ வசதிகள் இருந்தும் இறப்பு விகிதம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே செல்கிறது.
இதற்கிடையே கொரோனா பாதிப்பினால் நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 897 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் அமெரிக்காவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 65 ஆயிரத்து 753 ஆக அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் என்ன தகவல் வருமோ என அங்குள்ள மக்கள் அதிர்ச்சியில் உறைந்து உள்ளார்கள்.