777 Charlie Trailer

"கோர்ட் சொன்ன பணத்தை ஆம்பர் ஹெர்ட் கொடுக்கலைன்னா என்ன பண்ணுவீங்க?".. ஜானி டெப்பின் வழக்கறிஞர் சொன்ன பதில்.. நெகிழ்ந்துபோன ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தனது முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட் மீது தொடுத்திருந்த வழக்கில் ஜானி டெப் தரப்புக்கு ஆதரவாக நடுவர் மன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்திருந்தது. அதில், ஜானி டெப்பிற்கு 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பீட்டு தொகை வழங்கும்படி ஆம்பர் ஹெர்ட்டுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், ஒருவேளை ஜானி டெப் அந்த தொகையை செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கக்கூடும் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளது பரவலாக பேசப்பட்டு வருகிறது.

"கோர்ட் சொன்ன பணத்தை ஆம்பர் ஹெர்ட் கொடுக்கலைன்னா என்ன பண்ணுவீங்க?".. ஜானி டெப்பின் வழக்கறிஞர் சொன்ன பதில்.. நெகிழ்ந்துபோன ரசிகர்கள்..!

ஜானி டெப்

1984 ஆம் ஆண்டு திரைத்துறைக்குள் கால் பதித்த ஜானிக்கு உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றுத்தந்தது பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் சீரிஸின், 'ஜாக் ஸ்பாரோ' என்ற கதாபாத்திரம் தான். ஹாலிவுட் வட்டாரத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக கருதப்படும் ஜானி டெப்பிற்கும் நடிகை ஆம்பர் ஹெர்ட்டுக்கும் காதல் மலர்ந்தது. இதனையடுத்து 2015 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். ஆனால், அடுத்த 15 மாதங்களில் ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

வழக்கு

இந்நிலையில், 2018 ஆம் ஆண்டு ஆம்பர் ஹெர்ட் எழுதிய ஒரு கட்டுரையில் குடும்ப வன்முறையால் தான் பாதிக்கப்பட்டதாகவும், குடும்பத்தில் பெண்களுக்கு நடைபெறும் பாலியல் துன்புறுத்தல் குறித்தும் ஆம்பர் எழுதியிருந்தார். இந்த கட்டுரையில் ஜானி டெப்பின் பெயரை ஆம்பர் குறிப்பிடவில்லை. ஆனாலும், இந்தக் கட்டுரை வெளியான சில நாட்களில் பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் படத்தின் 6-வது பாகத்திலிருந்து ஜானி டெப் நீக்கப்பட்டது ஹாலிவுட் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

15 மில்லியன் டாலர் 

இந்நிலையில், தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக ஆம்பர் ஹெர்ட் மீது வழக்கு தொடர்ந்தார் ஜானி டெப். உலகம் முழுவதிலும் இருந்து பலராலும் நேரலையாக பார்க்கப்பட்ட இந்த வழக்கின் விசாரணை கடந்த வாரம் முடிவடைந்தது. இதில், ஜானி டெப்பிற்கு ஆதரவாக நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதன்மூலம், ஜானி டெப்பிற்கு 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகையை இழப்பீடாக வழங்கும்படி ஆம்பர் ஹெர்ட்டுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து ஃபேர்ஃபாக்ஸ் கவுண்டி நீதிபதி பென்னி அஸ்கரேட், அவதூறு வழக்குகளில் இழப்பீடு பற்றிய வர்ஜீனியா சட்டங்களை மேற்கோள் காட்டி,  ஹெர்ட் செலுத்த வேண்டிய தொகையை 10.35 மில்லியன் அமெரிக்க டாலர்களாக குறைத்தார். இருப்பினும், ஆம்பரின் வழக்கறிஞர் எலைன் ப்ரெட்ஹோஃப்ட், "ஜானி டெப்பிற்கு இவ்வளவு தொகையை தனது வாடிக்கையாளரால் கொடுக்க முடியாது" எனத் தெரிவித்திருந்தார்.

பணம் முக்கியமல்ல..

இந்நிலையில், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜானி டெப்பின் வழக்கறிஞர் பெஞ்சமின் செவ்," ஒருவேளை மேல்முறையீட்டிற்கு செல்லாமல் சுமூக தீர்விற்கு அவர் (ஆரம்பர் ஹெர்ட்) ஒத்துழைத்தால் ஜானி டெப், தனக்கு சேரவேண்டிய இழப்பீட்டுத் தொகையை செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கக்கூடும். இருப்பினும் எங்களால் வெளிப்படையாக எந்த வழக்கறிஞர்-வாடிக்கையாளரின் தகவல்தொடர்புகளையும் வெளியிட முடியாது, ஆனால் டெப் சாட்சியம் அளித்தது போலவும், நாங்கள் இருவரும் எங்கள் முடிவுகளில் தெளிவாகக் கூறியது போலவும், இது டெப்பிற்கான பணத்தைப் பற்றியது அல்ல. இது அவரது நற்பெயரை மீட்டெடுப்பது பற்றியது. அவர் அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்" என்றார். இது ஹாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

JOHNEYDEPP, AMBERHEARD, CASE, ஜானிடெப், ஆம்பர்ஹெர்ட், வழக்கு

மற்ற செய்திகள்