‘அடுத்தடுத்த சிக்ஸர்’ .. அடித்து பறக்கவிடும் பைடன்.. ‘நிர்வாகத்தில் செய்யப்பட்டுள்ள அதிரடி மாற்றம்!’
முகப்பு > செய்திகள் > உலகம்அண்மையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு எதிராக நின்று, ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவருடன் கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதியாக வென்றார்.
முதல் அறிவிப்பாக அமெரிக்க வாழ் இந்தியர்களின் சிரமங்களைகளையும் விதமான குடியுரிமை உள்ளிட்ட முடிவுகளை துரிதமாக எடுத்த ஜோ பைடன், தமது அவையில் அடுத்தடுத்து இந்தியர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வந்ததாக தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. குறிப்பாக கமலா ஹாரிஸ் மன்னார்குடியை பூர்விகமாகக் கொண்டவர் என்கிற தகவல் பிரபலமானது. இதேபோல், பைடனின் மருத்துவக் குழுவின் முக்கியப் பொறுப்பில் தமிழகத்தில் ஈரோட்டை பூர்விமகமாகக் கொண்ட செலின் கவுண்டர் பிரபலமானார்.
இந்நிலையில், தமது நிர்வாகத்திற்கு முழுவதும் பெண்களால் ஆன செய்த செய்தி தொடர்பாளர் குழுவை பைடன் நியமித்துள்ளார். இதேபோல் வெள்ளை மாளிகையின் செய்திப் பிரிவு தலைவராக முன்னாள் வெளியுறவு அமைச்சக செய்தி செய்தித் தொடர்பாளர் ஜென் சாகியை அவர் நியமித்துள்ளதுடன், வெள்ளை மாளிகையின் தகவல்துறை இயக்குநராக பைடன் மற்றும் கமலா ஹாரிஸின் பிரச்சாரப் பணிகளை கவனித்து வந்த கேட் பெடிங்பீல்டு நியமிக்கப்பட்டுள்ளார்.
மற்ற செய்திகள்