கவலைப்படாதீங்க டிரம்ப்.. இங்க வாங்க ஒரு நல்ல ‘வேலை’ போட்டுத் தர்றோம்.. சமயம் பார்த்து ‘கலாய்த்த’ நாடு..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் தோல்வி அடைந்தவுடன், சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனத்துக்கும், கிண்டல்களுக்கும் ஆளாகியுள்ளார்.
இஸ்ரேல் நாட்டின் தலைநகர் ஜெருசலேம் நகராட்சி, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அதிபர் டிரம்ப்பைக் கிண்டலடிக்கும் விதமாக பதிவிட்டு அதைச் சிறிது நேரத்தில் நீக்கிவிட்டது. அதில், ‘அதிபர் டிரம்ப் கவனத்துக்கு. தேர்தலில் தோற்றுவிட்டோம் எனக் கவலைப்படாதீர்கள். ஜெருசலேம் வந்துவிடுங்கள். இங்கே ஏராளமான வேலைகள் காத்திருக்கின்றன. ஜெருசலேம் நகராட்சி ஏராளமான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி நாள்தோறும் வேலை வழங்கி வருகிறது. உங்களுக்குத் தகுதியான வேலையைக் கொடுக்கிறோம். அமெரிக்காவை கிரேட்டாக (சிறந்ததாக) மாற்றுவோம் என்பதுபோல், ஜெருசலேமை கிரேட்டாக மாற்றுவோம்’ எனத் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஜெருசலேம் நகராட்சியின் இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து உடனடியாக நீக்கப்பட்டது. இதுகுறித்து ஜெருசலேம் நகராட்சியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘அதிபர் டிரம்ப்பைக் கிண்டல் செய்து பதிவிட்ட சம்பவம் தவிர்க்கப்பட வேண்டியது. அந்தத் தகவல் தெரிந்தவுடன் உடனடியாக பதிவை நீக்க உத்தரவிட்டோம்’ என கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்