'இனிமேல் மரணமே இருக்காது'... 'சாகா வரத்திற்காக அமேசான் நிறுவனர் போட்டுள்ள மாஸ்டர் பிளான்'... அசரவைக்கும் தகவல்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமேசான் நிறுவனர், சாகா வரம் பெறுவதற்கான முயற்சியில் கோடிகளைக் கொட்டி வருவதாகப் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

'இனிமேல் மரணமே இருக்காது'... 'சாகா வரத்திற்காக அமேசான் நிறுவனர் போட்டுள்ள மாஸ்டர் பிளான்'... அசரவைக்கும் தகவல்!

மரணமே இருக்கக் கூடாது அதற்கான மாற்று வழி என்னவென்பது குறித்து பல்வேறு நாடுகள் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. மன்னர்கள் ஆண்ட காலகட்டத்தில் கூட  தாங்கள் மரணம் அடையக் கூடாது என்பதற்காக, பலரும் சாகா வரப் பூஜைகள் எல்லாம் செய்த கதைகளைப் படித்திருப்போம். இந்த சாகா வரத்திற்காக இப்போது வரையிலும், பல நாடுகளில் கோடிக்கணக்கில் முதலீடு செய்து ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

Jeff Bezos Invests In Anti-ageing Biotech Startup

அந்த வகையில் உலக கோடீசுவரர்களில் ஒருவரும், அமேசான் நிறுவனத்தின் நிறுவனருமான Jeff Bezos சாகா வாரத்திற்கான ஆராய்ச்சியில் இறங்கியுள்ளார். இதற்காக அவர் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஆராய்ச்சி நிறுவனமான அட்லாஸ் லேப்ஸில் பல கோடிகளை முதலீடு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிறுவனம் தற்போது மனிதக் குலத்திற்குச் சாகா வரம் அளிக்கும் ஆராய்ச்சியைச் செய்து கொண்டு இருக்கிறது. மனிதர்கள் சாகாமல் எப்போதும் இளமையாகவே இருக்க வைப்பதற்கான ஆராய்ச்சிகளை இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. பொதுவாக மனிதர்களுக்கு உடலில் இருக்கும் செல்கள் வளர்ந்து அது பெரிதாகிப் பல பிரிவுகளாகப் பிரிந்து அந்த செல்களும் வளர்ந்து பின் அது செயல் இழந்து இறந்து மடியும்.

Jeff Bezos Invests In Anti-ageing Biotech Startup

ஒருவேளை இந்த செல்களை வயதாக விடாமல், இளைமையாகவே வைத்து இருந்தால் எப்படி இருக்கும். இதைக் கேட்பதற்கு மிகவும் எளிதானது என்றாலும், இதைச் சாதிப்பது என்பது அவ்வளவு எளிது கிடையாது. முதலில் விலங்குகளில் இருக்கும் செல்களை இதுபோல புதுப்பித்து மீண்டும் உயிர்பெற வைக்கும் ஆராய்ச்சிகளைச் செய்ய வேண்டும். அதில் ஏதும் பின்விளைவுகள் ஏதும் இல்லை என்றால் மட்டுமே நாம் அதை மனித உடல்களில் செயல்படுத்த முடியும்.

இந்த ஆராய்ச்சியைத் தான் தற்போது அட்லாஸ் லேப் நிறுவனம் செய்து வருகிறது. ஏற்கனவே யூனிட்டி டெக்னலாஜி என்ற நிறுவனத்தில் இதேபோல் Jeff Bezos சாகா வரம் குறித்த ஆராய்ச்சிக்கு முதலீடு செய்துள்ளார். உலக கோடீஸ்வர்களுக்கான வரிசையில், கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட தகவலின் படி Jeff Bezos 193.8 பில்லியன் அமெரிக்க டாலருடன் இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்