Oh My Dog
Anantham Mobile

நேரலையில் திடீர்னு கண்ணீர்விட்டு அழுத பெண் செய்தி வாசிப்பாளர்.. என்ன நடந்துச்சு?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஜப்பானைச் சேர்ந்த தொலைக்காட்சி ஒன்றில் நேரலையில் செய்தி வாசித்துக் கொண்டிருந்த பெண் திடீரென கண்ணீர் விட்டு அழுத சம்பவம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

நேரலையில் திடீர்னு கண்ணீர்விட்டு அழுத பெண் செய்தி வாசிப்பாளர்.. என்ன நடந்துச்சு?

Also Read |  அங்க நோ பால்-க்கு சண்ட போய்ட்டு இருக்கு.. இவரு என்ன தலையில தட்டி அனுப்பிட்டு இருக்காரு??.. சாஹல் - குல்தீப் நடுவே என்ன நடந்துச்சு??

நேரலை ஜப்பானைச் சேர்ந்த தனியார் செய்தி சேனலில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வருகிறார் யுமிகோ மட்சூ. இந்நிலையில் நேற்று உக்ரைன் பகுதியில் தாக்குதல் நடத்திய ரஷ்ய வீரர்களுக்கு அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் விருது அளித்து கௌரவப்படுத்திய செய்தியை யுமிகோ வாசித்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது கண்கள் கலங்கின. அழுகையைக் கட்டுப்படுத்த முடியாததால் சிறிது நேரம் ஸ்தம்பித்த அவர் சிறிது நேரத்திற்கு பிறகு செய்தி வாசிப்பதை தொடர்ந்தார்.

Japanese newsreader breaks down in tears live on air

போர்

ஐரோப்பிய யூனியனுடன் இணைய உக்ரைன் நாடு விருப்பம் தெரிவித்து வந்த நிலையில் ரஷ்யா இதனை கடுமையாக எதிர்த்தது. இதனையடுத்து கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி உக்ரைன் மீது போர் தொடுப்பதாக அறிவித்தார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். இதைத் தொடர்ந்து உக்ரைனின் முக்கிய நகரங்களை குறிவைத்து ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக பல லட்சம் மக்கள் உக்ரைனின் விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

Japanese newsreader breaks down in tears live on air

மன அழுத்தம்

மேலும் இந்தப் போரினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் உக்ரைனின் புச்சா பகுதியில் ரஷ்ய ராணுவம் கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் உக்ரைனில் போரிட்டு வரும் ரஷ்ய வீரர்களுக்கு அந்நாட்டு அதிபர் விருதளித்து பாராட்டியுள்ள இந்த செய்தியை வாசிக்கும் போது யுமிகோ தன்னை கட்டுப்படுத்த முடியாமல் அழுதிருக்கிறார்.

Japanese newsreader breaks down in tears live on air

செய்தி வாசிப்பதை நிறுத்திவிட்டு பேசிய அவர் "இந்த செய்தியை வாசிப்பது மிகுந்த மன அழுத்தத்தைத் தருகிறது. மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் அமைதியாக இருக்கவேண்டும்" என கூறியபடி தொடர்ந்து செய்தியை வாசித்தார்.

ஜப்பான் தொலைக்காட்சி ஒன்றில் பெண் செய்தி வாசிப்பாளர் நேரலையில் அழுத வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://www.behindwoods.com/bgm8/

JAPANESE NEWSREADER, JAPANESE NEWSREADER BREAKS DOWN IN TEARS, பெண் செய்தி வாசிப்பாளர், ஜப்பான்

மற்ற செய்திகள்