மக்களுக்கு ‘இலவசமாக’ கொரோனா தடுப்பு மருந்தை வழங்க போகும் நாடு.. வெளியான ‘அதிரடி’ அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா தடுப்பு மருந்து நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கும் வகையிலான சட்டத்துக்கு ஜப்பான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மக்களுக்கு ‘இலவசமாக’ கொரோனா தடுப்பு மருந்தை வழங்க போகும் நாடு.. வெளியான ‘அதிரடி’ அறிவிப்பு..!

ஜப்பான் நாட்டில் கடந்த ஜனவரி மாதம் நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து வைரஸ் தொற்று நாடு முழுவதும் வேகமாக பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதுவரை அந்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் 1,50,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதனால் நோய் பாதிப்பை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கொரோனா தடுப்பு மருந்துகளை வழங்குவதற்கான பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.

Japan to give free COVID-19 vaccine to all its residents

இந்நிலையில் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை வெற்றியை கண்டுள்ள நிலையில், நாட்டு மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பு மருந்துகள் வழங்கும் வகையிலான புதிய சட்டத்துக்கு ஜப்பான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

Japan to give free COVID-19 vaccine to all its residents

புதிய சட்டத்தின்படி ஜப்பானில் உள்ள 126 மில்லியன் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க ஆகும் செலவை அரசே ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அமெரிக்க மருந்து நிறுவனமான ஃபைசரிலிருந்து 60 மில்லியன் மக்களுக்கும், பயோடெக் நிறுவனமான மாடர்னாவிலிருந்து 25 மில்லியன் மக்களுக்கு கொரோனா தடுப்பு மருந்துகளை ஜப்பான் பெற்றுள்ளது. மேலும் 120 மில்லியன் டோஸ் ஆஸ்ட்ராசென்கா தடுப்பு மருந்தை பெறவும் அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மற்ற செய்திகள்