100 வருசத்துக்கு முன்னாடி கட்டுன 'மரவீடு'.. பிரம்மித்து பார்க்கும் நெட்டிசன்கள்.. அதுல இருக்குற ஒரு விஷயம் தான் இதுக்கு காரணம்"!!
முகப்பு > செய்திகள் > உலகம்100 ஆண்டுகளுக்கு முன் மரக்கட்டைகளால் கட்டப்பட்ட வீடும், அதில் ஒளிந்திருக்கும் அசத்தலான தொழில்நுப்டமும் பலரையும் மிரள வைத்துள்ளது.
சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்பது பலருக்கு மிகப் பெரிய கனவாக தான் இருக்கும். இன்றைய காலகட்டத்தில், நாட்கள் செல்ல செல்ல வீடு கட்ட தேவைப்படும் பொருட்களின் விலை என்பது கணிசமாக உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
இதன் காரணமாக, தங்களின் கனவு இல்லங்களை கட்ட வேண்டும் என நினைக்கும் பலரும், குறைந்தபட்ச தொழில்நுட்பத்துடன் கூடிய பலம் கொண்ட வீடுகளை திட்டம் போட்டு கட்டி வருவதை நாம் வீடியோக்கள் மற்றும் செய்திகளாக நிறைய கேள்விப்பட்டிருப்போம்.
அந்த வகையில், ஜப்பான் நாட்டில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு, மரத்தைக் கொண்டு மட்டுமே கட்டப்பட்ட வீடு தொடர்பான வீடியோ, பலரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்துள்ளது. ஜப்பானில், Miyadaiku என்ற தச்சுத் தொழில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். இந்த தொழில் முறையில் உருவாக்கப்படும் வீடுகள் வெறும் மரக்கட்டைகளை மட்டுமே கொண்டு கட்டப்படுகிறது. மரத் துண்டுகளை இணைக்க, ஆணிகள், பசை, ஸ்க்ரூ, மின்சார கருவிகள் உள்ளிட்ட எந்த பொருட்களும் இந்த கலையில் பயன்படுத்தபடாது என்பது தான் இதன் சிறப்பம்சம்.
மரத்துண்டுகளை ஒவ்வொன்றன் மீது ஒன்றாக இணைத்து தான் இந்த மர வீடுகளை அப்போதைய தச்சர்கள் உருவாக்கி உள்ளார்கள். ஜப்பானில் இப்படி உருவாக்கப்பட்ட மர வீடு ஒன்றை தற்போது அங்குள்ள சிலர் இணைந்து, இது எப்படி இணைக்கப்பட்டுள்ளது என்பதை காண்பிப்பதற்காக மீண்டும் அதனை எடுத்து, மறுகட்டமைப்பு செய்து வருகின்றனர்.
100 ஆண்டுகளுக்கு முன்பு, Miyadaiku என்ற இந்த தச்சுத் தொழில் முறை மிகவும் பிரபலமாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், தற்போது இந்த வீட்டின் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. சுமார் இரண்டு மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து இந்த வீடியோ அதிகம் வைரலாகி வரும் நிலையில், பலரும் இப்படி ஒரு தொழில்நுட்பத்தினை கண்டு வியந்து போயுள்ளனர். ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகளில், Miyadaiku முறையில் கட்டப்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இன்றும் பெருமபாலான அளவில் உள்ளது.
இன்றைய காலத்தில், வீடு கட்டுவதில் புது புது டெக்னிக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு வந்தாலும், 100 ஆண்டுகளுக்கு முன் ஆணிகள், பசை என எந்தவித விஷயமும் இன்றி, வெறும் மரத் துண்டுகளை மட்டுமே கொண்டு கட்டப்பட்டுள்ள இந்த வீடு, பலரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்துள்ளது.
A Japanese house constructed without any nails over 100 years ago...
— Tansu YEĞEN (@TansuYegen) August 21, 2022
Also Read | "என்னது, அவருக்கு 3 கிட்னி இருக்கா??".. உச்சகட்ட குழப்பத்தில் மக்கள்.. பின்னணி என்ன??
மற்ற செய்திகள்