அடேங்கப்பா..!! ரூபாய் ரெண்டே கால் கோடிக்கு ஏலம் போன மீன்.. அப்படி என்ன ஸ்பெஷல்🤔

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஒரே ஒரு மீன் 2.25 கோடி ரூபாய்க்கு ஏலம் போன நிலையில், அது குறித்த காரணம் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

அடேங்கப்பா..!! ரூபாய் ரெண்டே கால் கோடிக்கு ஏலம் போன மீன்.. அப்படி என்ன ஸ்பெஷல்🤔

ஜப்பானின் தொயோசு என்னும் மீன் சந்தையில் ஒவ்வொரு வருட புத்தாண்டுக்கும் மீன் ஏலம் நடைபெறுவதாக தகவல்கள் கூறுகின்றது. அப்படி இருக்கையில், கடந்த ஆண்டு மீன் ஏலம் நடைபெற்ற போது சூரை மீன் ஒன்று, ஒரு கோடியே 5 லட்ச ரூபாய்க்கு ஏலம் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனை பிரபல நட்சத்திர விடுதி ஒன்று ஏலத்தில் எடுத்திருந்தது.

அதே நட்சத்திர விடுதி, இந்த ஆண்டும் மீன் ஏலத்தில் கலந்து கொண்டு சுமார் 212 கிலோ எடையுள்ள சூரை மீன் ஒன்றை 2.25 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக அந்த மீனை பிடித்த மீனவர்கள் மிகுந்த உற்சாகத்தில் திளைத்து போயுள்ளதாகவும் தெரிகிறது. 2 கோடி ரூபாய்க்கு மேல் ஒரு மீன் ஏலம் போனது, பலரையும் வியப்பிலும் ஆழ்த்தி இருந்தது.

ஒரு மீனுக்குள் அப்படி என்ன சிறப்பம்சம் இருக்கிறது என்ற கேள்வி பலருக்கும் எழலாம். இதற்கு காரணம், அந்த சூரை மீனில் நிறைய பலன்கள் இருப்பது தான்.

இந்த மீனை சாப்பிடுவதால் விட்டமின் B 12 நமக்கு கிடைக்கும். அதே போல புதியதாக ரத்த செல் உருவாகவும் இது பெரிய அளவில் உதவி செய்வதாக தகவல்கள் கூறுகின்றது. அது மட்டுமில்லாமல், இருதயம் சம்பந்தமான நோய்களின் ஆபத்தை இந்த சூரை மீன் குறைப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதில் ஒமேகா 3 Fatty Acid உள்ளது இருதய தொடர்பான பிரச்சனைகளை கட்டுப்படுத்துவதாகவும் சொல்கிறார்கள். அதே போல கேன்சர் கட்டி இருக்கும் நபர்களுக்கு அதன் வளர்ச்சியை இந்த மீன் குறைப்பதாகவும் தெரிகிறது.

இப்படி இன்னும் பல சிறந்த குணங்கள் இந்த சூரை மீனில் உள்ளதன் காரணமாக தான் இத்தனை கோடி ரூபாய்க்கு அதனை வாங்கவும் போட்டி போடுகின்றனர். இது தவிர, இந்த சூரை மீன் சாப்பிடுவதற்கு மிக மிக சுவையாக இருப்பதும் இப்படி ஒரு போட்டி எழ காரணமாக பார்க்கப்படுகிறது.

JAPAN, FISH

மற்ற செய்திகள்