'மன்னிப்பு கேட்டா சரியா போய்டுமா?... 'எவ்வளவு கனவோடு வெளிநாட்டுக்கு படிக்க போனா'... நொறுங்கிப்போன குடும்பம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வெளிநாட்டிற்குப் படிக்கச் சென்ற இடத்தில் இளம்பெண் ஒருவருக்கு நடந்த துயரம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

'மன்னிப்பு கேட்டா சரியா போய்டுமா?... 'எவ்வளவு கனவோடு வெளிநாட்டுக்கு படிக்க போனா'... நொறுங்கிப்போன குடும்பம்!

இலங்கையின் கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர் Wishma Sandamali Ratnayake. இவர் உயர் கல்வி கற்க விரும்பிய நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு மாணவர் விசா மூலம் ஜப்பான் சென்றார். ஜப்பானில் இறங்கிய, அவர் அங்கு தன்னுடைய உயர்கல்வியைத் தொடங்குவதற்கு முன்பு நல்ல ஊதியத்தில் வேலை பார்க்கலாம் என ஆசைப்பட்டுள்ளார்.

Japan apologizes and vows reform after woman's death in immigration

ஆனால், ஜப்பானில் மாணவர் விசாவில் உள்ளவர்கள், வாரத்திற்கு 28 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய முடியும். அதோடு அவர்களுக்கு நிரந்தர வேலை கிடைப்பது என்பது மிகவும் கடினம் என்பதை அவர் அங்குச் சென்ற பின்னரே உணர்ந்து கொண்டார். இதையடுத்து இவர் அங்கிருக்கும் கல்வி நிறுவனம் ஒன்றில், ஜப்பானிய மொழியைப் படிக்கத் துவங்கியுள்ளார்.

ஆனால் அதற்கான கல்விக் கட்டணத்தைக் கூட செலுத்த முடியாமல் அவர் அவதிப்பட்ட நிலையில், அங்கிருந்த இளைஞர் ஒருவர் Wishmaவிற்கு பாலியல் ரீதியாகத் துன்புறுத்தலை வழங்கியுள்ளார். இதனால் Wishma காவல்நிலையத்தை நாடியுள்ளார். ஆனால் அங்கும் அவருக்கும் சரியான உதவி கிடைக்காத நிலையில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

Japan apologizes and vows reform after woman's death in immigration

ஒரு புறம் நல்ல வேலை கிடைக்காமலும், கல்விக் கட்டணம் செலுத்த முடியாமலும் அவதிப்பட Wishmaவிற்கு, அவருக்கு வழங்கப்பட விசாவிற்கு அதிகப்படியான நாட்களுக்கு மேல் தங்கிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து Wishma அங்கிருக்கும் தடுப்பு முகாமில் சிறை வைக்கப்பட்டார்.

இதன் காரணமாக இலங்கைக்குச் செல்ல முடியாமல் தவித்த Wishma, ஒரு குற்றவாளி போல் சிறிய அறையில் அடைக்கப்பட்டு 7 மாதங்கள் கடுமையான துயரங்களுக்கு ஆளாகியுள்ளார். தனக்குக் குடியேற்ற அதிகாரிகள் தேவையான பாதுகாப்பை வழங்குவார்கள் என்று Wishma எதிர்பார்த்த நிலையில், அது எதுவும் நடக்காமல் போனது.

Japan apologizes and vows reform after woman's death in immigration

இதற்கிடையே  கடந்த டிசம்பரில் Wishmaவின் உடல்நிலை மிகவும் மோசமான நிலைக்குச் சென்ற நிலையில்,  அவரால் நடக்கக் கூட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் அவர் சுமார் 20 கிலோ எடையை இழந்த நிலையில் ஒரு சக்கர நாற்காலியால் வைத்து அழைத்துச் செல்லும் அளவிற்கு மிகவும் பலவீனமாக இருந்தார். ஒரு கட்டத்தில் இலங்கைக்குக் கூட திரும்ப முடியாத நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

Japan apologizes and vows reform after woman's death in immigration

இதனை அறிந்த Wishmaவின் குடும்பம் நிலைகுலைந்து போனது. அவர்கள் தங்கள் மகள்  எப்படி? ஏன் இறந்தார்? என்பதை ஜப்பானிய அரசாங்கம் விளக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இலங்கை பெண் உயிரிழந்த சம்பவத்தில் மன்னிப்பு  கோருவதாக நிதி அமைச்சர் Yoko Kamikawa கூறியுள்ளார். ஆனால் அரசு மன்னிப்பு கோரினால் எங்கள் மகள் திரும்பி வந்து விடுவாரா என சோகத்துடன் கூறியுள்ளார்கள்.

மற்ற செய்திகள்