‘யார் நீங்க.?’.. ‘நான் அதிஷ்டம்’!.. tired ஆகுதுப்பா.. போயிட்டு நாளைக்கு வா.. கனடா பெண்ணுக்கு அடித்த யோகம்.!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அதிர்ஷ்டம் ஒரு தடவை தான் கதவை தட்டும் என்பார்கள். ஆனால் கனடாவை சேர்ந்த பெண் ஒருவருக்கு தினமும் அதிர்ஷ்டம் கதவைத் தட்டி தட்டி அவரை அயர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.

‘யார் நீங்க.?’.. ‘நான் அதிஷ்டம்’!.. tired ஆகுதுப்பா.. போயிட்டு நாளைக்கு வா.. கனடா பெண்ணுக்கு அடித்த யோகம்.!

Also Read | பல வருஷ காதல்.. திருமணத்திற்கு முன் காதலி செய்த விஷயம்.. மனம் பொறுக்காமல் இளைஞர் எடுத்த முடிவு

கனடாவின் ஒன்றாரியோவைச் சேர்ந்த பெண்மணி Jane. இவர் ஒரு சாதாரண பணியில் இருந்தவர் தான். இவருக்கு நடந்துள்ள சம்பவம் தான் பலருக்கும் தற்போது உத்வேகம் வர காரணமாக இருப்பதுடன், அதிர்ஷ்டம் என்கிற சொல்லின் மீது நம்பிக்கை பிறக்க காரணமாக இருந்திருக்கிறது. அது எப்படி நடந்தது என்பது தான் இன்னும் ஆச்சரியம்.

Jane-க்கு முன்னதாக லாட்டரி மீது  மிகுந்த ஆர்வம் இருந்திருக்கிறது. இந்த நிலையில்தான் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அவருக்கு லாட்டரியில் பரிசு விழுந்தது. அதாவது கனடியன் டாலர் மதிப்பில் 1000 டாலர் பரிசாக கிடைத்திருக்கிறது. ஆனால் இந்த பரிசு இது ஒருநாள் மட்டுமல்ல தினமும். தினமும் மட்டுமல்ல வாழ்நாள் முழுவதும். ஆம், அந்த அளவுக்கு உச்சகட்ட மகிழ்ச்சி அளிக்கும் பரிசு தான் இவருக்கு கிடைத்திருப்பது. முதலில் லாட்டரியில் தனக்கு விழுந்த 7 மில்லியன் டாலர் பணத்தை க்ளெய்ம் செய்ய போன இவருக்கு அடித்த இப்படி ஒரு யோகம் பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

Jane the Vaughan woman daily claims $ 1000 prize money

அவருக்கு வந்த ஆஃபர் படி, மொத்த பரிசுத் தொகையான 7 மில்லியன் டாலரை ஒரேநேரத்தில் தேர்ந்தெடுத்தால், இப்படி தினமும் 1000 டாலர் கிடைத்திருக்காது. எனவே தம்முடைய லாட்டரி செயலி மூலம் ஸ்கேன் செய்த அவர் பிக் வின்னர் என்கிற வார்த்தையை பார்த்திருக்கிறார். அப்போது அவருக்கு தினமும் 1000 லாடர் கிடைக்கும் செய்தி தெரியவர, உடனடியாக இந்த மகிழ்ச்சியான செய்தியை குடும்பத்தார் அனைவரிடமும் தெரிவித்திருக்கிறார்.

இந்த பணத்தை வைத்து குடும்பத்தாருடன் மகிழ்ச்சியுடன் இருப்பதுடன், எதிர்கால சந்ததிகளுக்கான நல்ல வாழ்க்கையை உறுதி செய்ய முடியும் என்றும், தம்முடைய ஓய்வு காலத்தில் இந்த பணத்தை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றும் Jane தெரிவித்துள்ளார்.

Also Read | பிரிட்டன் சாலையில் பெண் ஒருவருக்கு நேர்ந்த பதைபதைப்பு சம்பவம்.. அரண்டு போன அக்கம் பக்கத்தினர்.!

DAILY GRAND, VAUGHAN WOMAN, JANE E OF VAUGHAN

மற்ற செய்திகள்