77 ஆயிரம் கோடி செலவுல விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் மீது மோதிய விண்கல்.. அதிர்ச்சியில் உறைந்த ஆராய்ச்சியாளர்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்பெரும் பொருட்செலவில் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மீது விண்கல் ஒன்று மோதியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மனித குலம் பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருந்தாலும், பிரபஞ்சம் உருவானது எப்படி? என்ற கேள்விக்கு மட்டும் இன்னும் தெளிவான விடை கிடைத்தபாடில்லை. இந்த மர்மத்தை அவிழ்க்க, அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா உருவாக்கியதுதான் இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி. இதனை உருவாக்கும் பணிக்காக 10 பில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் 77 ஆயிரம் கோடி ரூபாய்) வாரி இறைத்தது அமெரிக்கா.
ரகசியம்
பிக்பேங் எனப்படும் பெருவெடிப்பில் இருந்து பிரபஞ்சம் உருவானதாக பொதுவாக ஆராய்ச்சியாளர்களால் நம்பப்படுகிறது. இந்நிலையில் தற்போது விண்வெளிக்கு அனுப்பப்பட்ட இந்த தொலைநோக்கி, பிரபஞ்ச துவக்கத்தை முக்கிய நிகழ்வுகளை விளக்க இருக்கிறது. நாசாவால் முன்னர் அனுப்பப்பட்ட ஹப்பிள் தொலைநோக்கி போல 100 மடங்கு சக்திவாய்ந்தது இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி. இதில் தங்கக் கண்ணாடி உள்ளது. அதன் அகலம் 21.32 அடி. பெரிலியத்தால் செய்யப்பட்ட 18 அறுகோண துண்டுகளை இணைத்து இந்த கண்ணாடி தயாரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துண்டிலும் 48.2 கிராம் தங்க முலாம் பூசப்பட்டு பிரதிபலிப்பானாக செயல்படுகிறது.
மனித குலத்தின் மைல்கல் சாதனை
கடந்த டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்ட இந்த தொலைநோக்கி மனித குல வரலாற்றின் முக்கிய சாதனையாக பார்க்கப்படுகிறது. 6.2 டன் எடைகொண்ட இந்த தொலைநோக்கி -230 டிகிரி செல்சியஸ் வெப்பத்திலும் இயங்கக்கூடியது. பேரண்டத்தை பல்வேறு விதமாக இந்த தொலைநோக்கி புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது. அவற்றை வரும் ஜூலை 12 ஆம் தேதி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மீது சிறிய விண்கல் ஒன்று மோதியதாக அறிவித்திருக்கிறது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா.
மோதிய விண்கல்
திறந்த வடிவமுடைய இந்த தொலைநோக்கியில் பொருத்தப்பட்டிருக்கும் பெரிலியம் - தங்க தகடுகளில் சி-3 என்று அழைக்கப்படும் ஒரு தகட்டினை இந்த விண்கல் தாக்கியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து 5 முறை இந்த விண்கல் தொலைநோக்கியில் மோதியிருப்பதாக தெரிகிறது. இருப்பினும், இதனால் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் செயல்பாட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என தெளிவுபடுத்தியுள்ளனர் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்.
விண்வெளியில் இதுபோன்ற, மிகச்சிறிய விண்கற்கள் இந்த தொலைநோக்கியில் மோதும் என எதிர்பார்த்தே, அதற்கு தகுந்தபடி உலோகங்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்தியுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். பிரதிபலிப்பானில் தற்போது பாதிக்கப்பட்டுள்ள தகட்டின் நிலையை பொறியாளர்கள் மாற்றியமைக்க இருப்பதாகவும் இதன்மூலமாக, தெளிவான காட்சியை பெறமுடியும் என நாசா அறிவித்துள்ளது.
மற்ற செய்திகள்