"அப்பாவை உட்காரவைத்து 1200 கி.மீ சைக்கிள் மிதித்து அழைத்துச் சென்ற இந்தியச் சிறுமி!".. அரண்டுபோய் இவாங்கா டிரம்ப் போட்ட ட்வீட்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஹரியானாவின் குர்கோவான் நகரில் இருந்து 15 வயது சிறுமி ஒருவர், காயமடைந்த தனது தந்தையை 1,200 கி.மீ தொலைவினைக் கடந்து சைக்கிளிலேயே தங்களது சொந்த ஊரான பீகாருக்கு 10 நாட்கள் கடந்து அழைத்துச் சென்று இந்திய அளவில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார்.
சமூக வலைதளங்களில் அந்த சிறுமி ட்ரெண்ட் ஆன ஜோதி குமாரி என்கிற அந்த 15 வயது சிறுமியின் சைக்கிள் ஓட்டும் திறமை குறித்து அறிந்த தேசிய சைக்கிள் பந்தைய கூட்டமைப்பின் தலைவர் ஓங்கர் சிங், லாக்டவுன் முடிந்த பிறகு சிறுமியை டெல்லிக்கு அழைத்து பயிற்சி கொடுக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஜோதிகுமாரியின் செயலை அமெரிக்க அதிபர் டிரம்பின் மகளும் ஆலோசகருமான இவாங்கா டிரம்ப், ஜோதிகுமாரியை பாராட்டியுள்ளார். இது பற்றி தனது ட்விட்டரில், “15 வயது ஜோதிகுமாரி 7 நாட்களில் 1200 கிமீ தொலைவையும் தண்டி சைக்கிளின் பின்புறத்தில் தனது தந்தையை வைத்து சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றுள்ளார். சகிப்புத்தன்மை மற்றும் இந்திய மக்களின் அன்பின் அழகான சாதனை கவரவைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்