'நம்மதாம்ல லேட்டு'!.. இங்கெல்லாம் ஆல்ரெடி புத்தாண்டு பிறந்தாச்சு!... ஆனா ‘கட்டக் கடைசியாக’ புத்தாண்டு பிறக்கப் போவது இவங்களுக்கு தான்!
முகப்பு > செய்திகள் > உலகம்நியூசிலாந்தில் பொதுமக்கள் வண்ண விளக்குகள், வானவேடிக்கைகளுடன் புத்தாண்டை வரவேற்று கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்தி, மற்ற நாடுகளை விட அட்வான்ஸாக பிறந்துவிட்ட தங்களது 2021 புதுவருடத்தை கொண்டாடினர்.
பசுபிக் பெருங்கடல் தீவுகளான அபியா, டோங்கா, கிரிபாடி, சமோவா மற்றும் கிறிஸ்துமஸ் தீவுகளைத் தொடர்ந்து உலகில் புத்தாண்டை வரவேற்கும் நாடு நியூசிலாந்து.
மற்ற நாடுகளுக்கு முன்னதாகவே இந்த நாட்டுக்கு 2021 பிறந்துவிட்டது.
இதற்கான முன்னேற்பாடுகளுடன் 2020 டிசம்பர் 31 ஆம் தேதியில் இருந்தே காத்திருந்தனர் நியூசிலாந்து மக்கள்.
2021 ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டு பிறந்த அடுத்த நொடியே ஜோடிக்கப்பட்ட வண்ணமயமான விளக்குகளை எரியவிட்டு ஒளி வெள்ளத்தால் புதுவருடத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
பசுபிக் பெருங்கடலின் நடுவில் உள்ள தீவுகளான பேக்கர்ஸ் தீவு, அமெரிக்கன் சமோவா உள்ளிட்ட தீவுகளுக்கு கடைசியில் புத்தாண்டு பிறக்கும்.
It's already 2021 in some parts of the world 🎆
The first capital to see in the new year was Apia, Samoa, and just next door Pago Pago, American Samoa will be the last (11 hours after the UK) 🕚 pic.twitter.com/PpmlIbCiw5
— Met Office (@metoffice) December 31, 2020
New Zealand celebrates the New Year with a fireworks show https://t.co/DlxaBuRHLm
— Reuters (@Reuters) December 31, 2020
குறிப்பாக அமெரிக்கன் சமோவாவுக்கு யுகேவில் புத்தாண்டு பிறந்து சுமார் 11 மணி நேரத்துக்கு பின்னர் தான் புத்தாண்டு பிறக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்