ஹெட் ஆபீஸ்னு பொய் சொல்லி, 1 வருஷமா ஓசில சாப்பிட்ட மாணவர்?.. கேஎஃப்சியின் வைரல் ட்வீட்!
முகப்பு > செய்திகள் > உலகம்திரைப்பட பாணியில், கேஎஃப்சி உணவகங்களுக்குச் சென்று தலைமை அலுவலகம் அனுப்பியதாகக் கூறி, அடையாள அட்டையைக் காண்பித்து மோசடி செய்த கல்லூரி மாணவர் ஒருவர், பல நாட்களாக வெவ்வேறு கேஎஃப்சி உணவகங்களின் வேவ்வேறு வகையிலான சிக்கன் டிஷ்களை சுவைத்து ருசித்துள்ளதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் தங்கள் கிளைகளை விரித்துள்ள கேஎஃப்சி உணவக நிறுவனத்தில் ஒன்று கேஎஃப்சி. இதன் தென்னாப்பிரிக்க கிளைகளுக்குச் சென்ற தென்னாப்பிரிக்காவின் க்வாஜுலு நடால் என்கிற பல்கலைக்கழக மாணவர் ஒருவர் அங்குள்ள வெவ்வேறு கிளைகளுக்கு வாடிக்கையாகச் சென்று வெவ்வேறு வகையினால உணவுகளின் தரத்தை ஆய்வு செய்வதற்காக கேஎஃப்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து வருவதாகக் கூறி, உணவுகளை ஒரு வருடமாக சுவைத்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
உணவகத்துக்குள் நுழைந்தவுடன் உணவு தயாரிக்கும் இடத்துக்கே நேரடியாகச் செல்லும் வழக்கம் உடைய இவர், உணவுகளைப் பற்றி குறிப்பெடுத்துக்கொள்வது உண்டாம். அதனால்தான் இவர் ஒரு அதிகாரியாக இருப்பார் என்கிற யோசனை உணவக ஊழியர்களுக்கு வந்திருப்பதாகவும், அவருக்கு கேஎஃப்சி உணவகத்தை பற்றிய எல்லா விபரங்களும் தெரிந்திருக்கின்றன; அதனால் அநேகமாக அவர் கேஎஃப்சியின் முந்தைய ஊழியராக இருந்திருக்கலாம் என்றும் அந்த செய்திகளில் கூறப்பட்டிருந்தது.
South African man arrested for eating at KFC free for a year by saying head office sent him to taste if they are up to standard. pic.twitter.com/1V4eD7IR2i
— The African Voice (@teddyeugene) May 12, 2019
தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரைச் சுற்றியுள்ள கேஎஃப்சி உணவகங்களில் தன்னுடைய வாய்வரிசையைக் காட்டியுள்ள இந்த 27 வயதான மாணவர் பற்றி எந்தத் தகவலும் வெளியிடப்படாத நிலையில், இவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த செய்தி ஒரு வதந்தி என தென்னாப்பிரிக்க கேஎஃப்சி நிறுவனம் மறுத்துள்ளதோடு, இந்த வதந்தியால் தங்களுக்கு இன்னும் விளம்பரம் கிடைத்துள்ளதாகவும், ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளது.
We totally would fam, if only it weren’t fake news doe. 🤷♀️🤦♀️ https://t.co/Z0V4psWanL
— KFC South Africa (@KFCSA) May 14, 2019