"எவ்ளோ ரிஸ்க் தெரியுமா??.." பள்ளத்தில் விழுந்த போன்.. அடுத்த கணமே சுற்றுலா பயணிக்கு காத்திருந்த 'அதிர்ச்சி'
முகப்பு > செய்திகள் > உலகம்தற்போது உலகெங்கிலும் உள்ள மக்கள் மத்தியில், செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்து வந்த வண்ணம் உள்ளது.
அது மட்டுமில்லாமல், இந்த செல்போன் மூலம் எங்கு சென்றாலும், யாரை பார்த்தாலும் உடனடியாக செல்ஃபி புகைப்படங்களை எடுக்க வேண்டும் என்று மோகமும் பலரது மத்தியில் பரவலாக உள்ளது.
பாதுகாப்பான இடங்களில் செல்பி எடுத்து வந்தாலும், உயிரை பணயம் வைத்து, மிகவும் ஆபத்தான இடங்களில் புகைப்படம் எடுக்கவும் முயற்சிப்பார்கள். அப்படிப்பட்ட இடங்களில், போட்டோ எடுப்பதை பலருக்கும் காண்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இப்படி முயற்சி செய்கிறார்கள்.
ஆனால், விழிப்புணர்வு இல்லாமல், இப்படி ஆபத்தான இடங்களில் செல்ஃபி எடுக்கும் போது தான், பல எதிர்பாராத அசம்பாவிதங்களும் நிகழாமல் இல்லை. அந்த வகையில், இளைஞர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்ற போது நடந்த சம்பவம், பலரின் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக, வெளியான தகவலின் படி சுமார் 23 வயதான சுற்றுலா பயணி ஒருவர் தனது குடும்பத்துடன் இத்தாலிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்குள்ள நேபிள்ஸ் நகரின் பிரபலமான வெசுவியஸ் எரிமலை உச்சிக்கு செல்லவும் அந்த இளைஞர் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. சுமார் 4200 அடி உயரமுள்ள இந்த எரிமலையில், உச்சிக்குச் செல்ல தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், அப்படி தடை செய்யப்பட்ட பாதையை பயன்படுத்தி அந்த இளைஞர், 4200 அடி உயரமுள்ள எரிமலை உச்சியில் ஏறி, அங்கே நின்றபடி செல்ஃபி எடுக்கவும் முயன்றுள்ளார். அப்படி அவர் செல்ஃபி எடுக்க முயன்ற சமயத்தில், கையில் இருந்த மொபைல் போன், பள்ளத்தில் விழுந்ததாக கூறப்படுகிறது. அப்படி விழுந்த போனை அந்த இளைஞர் எடுக்க முயன்ற போது, அவரும் தவறி பள்ளத்தில் விழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
எரிமலை அருகே தவறி விழுந்த சுற்றுலா பயணியைக் காப்பாற்ற அங்குள்ள டூரிஸ்ட் கேடுகள் கீழே இறங்கிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. மேலும், போலீசார் கூட ஹெலிகாப்டரில் சென்று 15 மீட்டரில் கயிறு ஒன்று கட்டி அந்த இளைஞரை மீட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. கயிறின் மூலம் இழுக்கப்பட்டதால், இந்த இளைஞரின் உடலில் சிறு காயங்களும் ஏற்பட்டுள்ளது. பின்னர், சிகிச்சை அளிக்கப்பட்டுள்ள இந்த இளைஞர், நலமுடன் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
சரியான வழியில் டிக்கெட் எடுக்காமல், எரிமலை செல்வதற்கு தடை செய்யப்பட்ட பாதையைத் தேர்வு செய்து சென்றது தான் ஆபத்தாக அமைந்தது என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர். இதற்காக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றது.
அந்த இளைஞர் மிகவும் அதிர்ஷ்டசாலி என்றும் அவர் தொடர்ந்து செல்ல நேரிட்டால், 300 மீட்டர் பள்ளத்தில் மூழ்கி இருப்பார் என்றும் அங்கிருந்த சிலர் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்