"பனி உருகுவதற்குள்ள... சீக்கிரமா கவர் பண்ணுங்க!".. பிரம்மாண்ட தார்பாலின் ஷீட்டுகளால் அவசர அவசரமாக மூடப்படும் பனிப்பாறைகள்!
முகப்பு > செய்திகள் > உலகம்இத்தாலியின் வடக்குப் பகுதியில் இருக்கும் ப்ரெஸ்னா பனிப்பாறை பகுதி உருகாமல் இருப்பதற்காக ஒவ்வொரு கோடைக் காலத்திலும் பெரிய தார்பாலின் ஷீட்டுகளை வைத்து, சூழலியலாளர்களாலும், இயற்கை ஆர்வலர்களாலும் மூடப்படுகிறது.

ப்ரெஸ்னா பனிப்பாறை பகுதி இத்தாலி வடக்கு பகுதியின் மூன்றில் இரு பங்காகும். உலக வெப்பமயமாதல் தொடர்பாக தொடர்ச்சியாக பேசி வரும் குழுத் தலைவராக ஒவ்வொரு வருடமும் இந்த தார்பாலின் கவரிங்கைச் செய்துவரும் டேவிட் பனிசா இதுகுறித்துப் பேசுகையில், "இந்த பகுதி பெருமளவு குறைந்து வருகிறது. பனி உருகுவதால் பனிபடர் பிரதேசம் குறைந்து தரைப்பகுதியாக மாறுவது சூழலுக்கு ஏற்றதல்ல" என்கிறார்.
2008-இல் 30,000 சதுர அடிகளை மூடி துவங்கப்பட்ட கெரசெல்லோ டொனேல் கம்பெனி, தற்போது 1,00,000 சதுர அடிகள் வரை பனி மறைத்து வருகிறார்கள்.
ஜியோ டெக்ஸ்டைல் தார்பாலினால் ஆன இந்த ஷீட்டுகள், வெளியிலுள்ள வெப்பத்தை கட்டுப்படுத்தி முடிந்த வரை பனி உருகாமல் பாதுகாப்பதாக தெரிவிக்கிறார்கள்.
TRENDING NEWS
மற்ற செய்திகள்
LATEST VIDEOS