'10 மாதம் கோமா'... 'எனக்கு எல்லாமே அவதான்னு கட்டிலின் அருகியிலேயே தவம்'... 'திடீரென கையை பிடித்து மனைவி சொன்ன வார்த்தை'... திக்குமுக்காடி போன கணவன்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

10 மாத கால கோமாவில் இருந்த பெண் எழுந்ததும் பேசிய வார்த்தை மொத்த குடும்பத்தையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

'10 மாதம் கோமா'... 'எனக்கு எல்லாமே அவதான்னு கட்டிலின் அருகியிலேயே தவம்'... 'திடீரென கையை பிடித்து மனைவி சொன்ன வார்த்தை'... திக்குமுக்காடி போன கணவன்!

இத்தாலி நாட்டை சேர்ந்தவர் கிறிஸ்டினா ரோஸி. இவர் கர்ப்பமடைந்த நிலையில்,  7 மாதம் ஆனபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு மூளையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவர் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டார்.

Italian woman wakes up after 10 months in coma

வயிற்றில் குழந்தை இருந்த நிலையில், இந்த சிக்கலான நேரத்தில் அவருக்குச் செய்யப்பட்ட  அறுவை சிகிச்சை மூலம் குழந்தையும் பிறந்தது. ஆனால் அவர் தொடர்ந்து கோமாவில் தான் இருந்துள்ளார். அவரது கணவர் கிறிஸ்டினாவை அருகிலிருந்து நன்றாகக் கவனித்துக் கொண்டார்.

Italian woman wakes up after 10 months in coma

கிறிஸ்டினாவுக்கு தேவையான அனைத்தையும் அவரே செய்த நிலையில், ஒரு குழந்தையைப் போலக் கவனித்துக் கொண்டார். எப்போது தனது மனைவி கோமாவில் இருந்து மீண்டு வருவார் எனத் தினம் தினம் பிரார்த்தனையும் செய்து வந்துள்ளார். இந்நிலையில் 10 மாதமாக கோமாவில் இருந்த கிறிஸ்டினா, திடீரென தனது கணவரின் கையை பற்றி, 'மம்மா' எனப் பேசியுள்ளார்.

Italian woman wakes up after 10 months in coma

மனைவி திடீரென பேசியதைப் பார்த்த அவரது கணவர் இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடிப் போனார். இதுகுறித்து பேசிய கிறிஸ்டினாவின் கணவர், ''இப்படி ஒரு சம்பவம் நிகழும் என எதிர்பார்க்கவே இல்லை எனக் கூறியுள்ளார். மேலும் இதுவரை அனுபவித்த துயரங்கள் அனைத்தும் நொடியில் மறைந்து விட்டது'' என நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார்.

இத்தாலியில் சிகிச்சையிலிருந்த கிறிஸ்டினா, கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆஸ்திரியாவிலேயே சிறப்புச் சிகிச்சையிலிருந்து வருகிறார். இவரது சிகிச்சை செலவுகளுக்காகப் பொதுமக்களிடம் இருந்து இதுவரை 148,000 பவுண்டுகள் நிதி திரட்டப்பட்டுள்ளது. தற்போது கிறிஸ்டினா குணமடைந்து வருவதாகவும், அதற்கான அறிகுறிகள் தெரிவதாகவும், கணவர் தெரிவித்துள்ளார்.

Italian woman wakes up after 10 months in coma

முன்னதாக பிரசவத்தின்போது ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் தம்பதியரின் மகள் பல மாதங்கள் மருத்துவமனையில் கழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்