டிக்-டாக் தடை செய்யப்பட்ட பிறகு இன்ஸ்டாகிராம் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் இடையே பிரபலமடைய காரணம் அதில் உள்ள ‘ரீல்ஸ்’ வசதி தான். மெட்டா நிறுவனமானது ரீல்ஸை 2020-ம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் அறிமுகப்படுத்தியது, பின்னர் பேஸ்புக்கில் 2021-ல் அறிமுகப்படுத்தியது. பிற சமூக வலைத்தள பக்கங்களைப் போல் புகைப்படம் மற்றும் கருத்தை மட்டும் பகிர்ந்து கொள்ளும் தளமாக இல்லாமல், ஆடல், பாடல், காமெடி என இளம் தலைமுறையினர் தங்களது திறமை சார்ந்த வீடியோக்களை பதிவேற்றவும், அதன் மூலம் பிரபலமடையும் தளமாகவும் இன்ஸ்டாகிராம் விளங்குகிறது.
இந்த செயலி இளம் தலைமுறையினரைக் கவர அதிமுக்கிய காரணம் ரீல்ஸ் என்பதால், இன்ஸ்டாகிராம் நிறுவனம் அடுத்தடுத்து ரீல்ஸ் சேவைக்கான அப்டேட் வசதிகளையும் வழங்கி வந்தது. சமீபத்தில் இன்ஸ்டாகிராம் ரீல்களுக்கான ரீமிக்ஸ் அம்சத்தை அறிமுகப்படுத்தியது, இது யூசர்கள் தங்கள் வீடியோக்களில், பிற யூசர்களின் ரீல்களை இணைக்க உதவிகரமாக அமைந்தது. இந்நிலையில், மெட்டா நிறுவனம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறிப்பபாக மற்ற சமூகவலைதளங்களை விட பேஸ்புக் தான் அதிகமான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது பேஸ்புக் ஷார்ட் வீடியோ அம்சமான ரீல்ஸை 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் அறிமுகப்படுத்த இருப்பதாக மெட்டா அறிவித்துள்ளது.
இந்த மிகப்பெரிய சமூக ஊடகமானது அதன் சந்தை மதிப்பில் மூன்றில் ஒரு பங்கை இழந்த பின், ரீல்ஸுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறது. இவை புகழ்பெற்ற சீன செயலியான டிக்டாக்கிற்கு பதிலடி தரும் வகையில் அமைந்தது. கடந்த செவ்வாய்க்கிழமையன்று மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் கூறுகையில், "ரீல்ஸ் ஏற்கனவே எங்களின் வேகமாக வளர்ந்து வரும் கன்டென்ட் வடிவமாகும், இதனை இன்று உலகளவில் பேஸ்புக்கில் அனைவருக்கும் கிடைக்கச் செய்ய போகிறோம்" என்று தெரிவித்தார்.
பேஸ்புக்கில் மக்கள் பாதி நேரத்தை வீடியோக்கள் பார்க்கத்தான் செலவிடுகிறார்கள் புள்ளி விவரங்கள் தெரிவிப்பதாக பேஸ்புக் கூறுகிறது. தற்போது அறிமுகப்படுத்தும் ரீல்ஸ் அம்சத்தின் மூலம் க்ரியேட்டர்களுக்கு வருவாய் ஈட்டுவதறகான புதிய வழிகளையும் வழங்குகிறது.
கிரியேட்டர்களுக்காக திட்டத்தை விரிவுபடுத்துவதாகவும், விளம்பர வருவாயை ஈட்டுவதற்கு, கிரியேட்டர்களுக்கு பேனர்கள் மற்றும் ஸ்டிக்கர்களை வழங்கி சோதிக்க போகிறது.
ஆப்பிளில் சில மாற்றங்களை செய்து, மெட்டா அதிக வருவாயை ஈட்டியுள்ளதாக கூறுகிறது. ஸ்டோரி, வாட்ச் டேப் மற்றும் நியூஸ் ஃபீட் போன்ற இடங்களில் பேஸ்புக் ரீல்ஸ்களை உருவாக்கவும் பார்க்கவும் பயனர்களுக்கு அப்டேட்டுகளை வெளியிடுவதாக தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்