'பெகாசஸ்' மூலம் உளவு பார்த்தது உண்மை தானா...? 'ஆய்வு செய்த இஸ்ரேலியப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள்...' - என்.எஸ்.ஓ நிறுவனமும் தகவல்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இஸ்ரேலியப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உலகநாடுகள் பயன்படுத்தும் உளவு மென்பொருளான பெகாசஸ்ஸை தயாரித்த என்.எஸ்.ஓ நிறுவனத்தில் ஆய்வு நடத்தியுள்ளனர்.

'பெகாசஸ்' மூலம் உளவு பார்த்தது உண்மை தானா...? 'ஆய்வு செய்த இஸ்ரேலியப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள்...' - என்.எஸ்.ஓ நிறுவனமும் தகவல்...!

என்எஸ்ஓ நிறுவனமானது ஒரு நாடு மற்றொரு நாட்டின் நடவடிக்கைகளையும், அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்கள் நாட்டின் முக்கிய அதிகாரிகள் போன்றோரை உளவுப்பார்ப்பதற்காகவே பெகாசஸ் என்னும் உளவு மென்பொருளை உருவாக்கியது.

இவை உலகின் முக்கிய 14 நாடுகளின் தலைவர்கள், எதிர்கட்சித் தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகள், செய்தியாளர்கள் உட்பட ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்டோரை, அவர்கள் உபயோகப்படுத்தும்  கைபேசிகளில் பெகாசஸ் என்னும் உளவு மென்பொருளைக் கொண்டு உளவுபார்க்கப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

இந்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலைகளையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக பெகாசஸ் உளவு மென்பொருளை தயார் செய்த என்.எஸ்.ஓ நிறுவனத்தை இஸ்ரேலிய அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.

இந்த ஆய்வு குறித்து இஸ்ரேலிய பாதுகாப்புத் துறை தன் டுவிட்டரில் தெரிவித்துள்ளது. அதோடு இஸ்ரேலியப் பாதுகாப்புத் துறைப் பிரதிநிதிகள் தங்கள் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டதாகவும் என்.எஸ்.ஓ நிறுவனமும் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்