'நாங்க இந்த தேதில கண்டிப்பா...' 'கொரோனா தடுப்பூசி மக்களுக்கு போட ஸ்டார்ட் பண்றோம்...' - அதிரடியாக அறிவித்த நாடு...!
முகப்பு > செய்திகள் > உலகம்டிசம்பர் 27-ஆம் தேதி முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி அளிக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு அறிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியது முதல் அதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகளும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில், இங்கிலாந்தில் பைசர்-பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியை அவசர தேவைகளுக்கு பயன்படுத்த பிரிட்டன் அரசு அனுமதி வழங்கியுள்ளதையடுத்து, அங்கு தற்போது பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து கூறிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு, பைசர் நிறுவனத்திடம் இஸ்ரேல் அரசாங்கம் ஆர்டர் செய்திருந்த கொரோனா தடுப்பூசிகளின் முதல் தொகுதி தற்போது வந்து சேர்ந்துள்ளதாகவும், இந்த மருந்து வரும் 27 ஆம் தேதி முதல் இஸ்ரேலில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். நாள் ஒன்றுக்கு சுமார் 60,000 பேருக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த தடுப்பு மருந்து இடப்பட்டப்பின் மக்கள் அனைவரும் சுதந்திரமாக பயணங்களை மேற்கொள்ளலாம் என்றும் நாட்டின் பொருளாதரம் மீண்டும் முன்னேற்றமடையும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் இஸ்ரேல் பிரதமர்.
மற்ற செய்திகள்