"எனக்கு 'கொரோனா'வே இல்ல... ஆனாலும் 4 தடவை 'குவாரன்டைன்' இருக்க சொன்னாங்க..." ஷாக்கான 'இளம்பெண்'... விசாரணையில் காத்திருந்த 'அதிர்ச்சி'!!!
முகப்பு > செய்திகள் > உலகம்வடக்கு இஸ்ரேல் பகுதியை சேர்ந்த 35 வயது ஆண் ஒருவர் அங்குள்ள சுகாதார அமைச்சகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் இவர் செய்த செயல் ஒன்று கடும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. அந்த நபர், அங்குள்ள பகுதியில் உள்ள பெண் ஒருவருக்கு கடந்த சில மாதங்களில், தொடர்ந்து நான்கு முறை கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்திக் கொள்ளும் படி அந்த பெண்ணின் மொபைலிற்கு மெசேஜ் அனுப்பியுள்ளார்.
ஆனால், சம்மந்தப்பட்ட அந்த பெண், தனக்கு கொரோனா தொற்றில்லை என்ற போதும் ஏன் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என தனக்கு வந்த தகவலை எதிர்த்து கேள்வி எழுப்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. அந்த பெண், சுகாதார அமைச்சகத்தில் பணிபுரியும் ஊழியரின் முன்னாள் காதலி என்பது தெரிய வந்தது.
அது மட்டுமில்லாமல், அந்த பெண்ணிற்கு ஒரு போதும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பதும், கொரோனா ஏற்பட்ட நபர்களுடன் கூட அந்த பெண் தொடர்பில் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த தகவல் தெரிய வந்ததும் அந்த ஊழியர் மீது பதவியின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், மோசடி, தனியுரிமை மீறல் உள்ளிட்ட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்