'வயசு ஆகாம இளமையாவே இருந்துட்டா எப்படி இருக்கும்?'.. முதுமையைக் கட்டிப்போடும் கண்டுபிடிப்பு!.. விஞ்ஞானிகள் சாதனை!.. பின்னோக்கி செல்கிறது வயது!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மனிதர்களில் முதுமை அடைவதற்கான செயல்முறையை உயிரியல் ரீதியாக மாற்றியமைக்க முடியும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

'வயசு ஆகாம இளமையாவே இருந்துட்டா எப்படி இருக்கும்?'.. முதுமையைக் கட்டிப்போடும் கண்டுபிடிப்பு!.. விஞ்ஞானிகள் சாதனை!.. பின்னோக்கி செல்கிறது வயது!!

மனிதர்கள் முதுமை அடைவதில் ஆக்ஸிஜனுக்கு அதிக பங்கு உள்ளது. இதற்கான செல்களை மாற்றியமைக்கும் சக்தியும் இதற்கு உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Telomeres மற்றும் senescent இரண்டையும் மையமாக வைத்தே இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. DNA சேதமடைவதை தடுப்பதற்கு குரோமோசோம்களின் முனைகளில் காணப்படும் அமைப்பே Telomeres.

அதேபோல் senescent செல்கள் முதுமை தொடர்பான மாற்றத்தில் பங்கு வகிக்கிறது.

இஸ்ரேலை சேர்ந்த டெல் அவிவ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வயதானவர்கள் மத்தியில் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டனர். 64 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு 100% தூய ஆக்ஸிஜன் வாரத்திற்கு ஐந்து நாட்கள் என தினமும் 90 நிமிடங்கள் கொடுக்கப்பட்டது.

israel scientists reverse ageing process in humans study details

சுமார் மூன்று மாதங்கள் அவர்களுக்கு ஆக்ஸிஜன் செலுத்தி இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

இதன்முடிவில் Telomeres, 25 ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்டதை போல் மாறியதை கண்டுபிடித்தனர். உடல் பாகங்களும் படிப்படியாக பழைய நிலைக்கு திரும்பியது. senescent செல்களை விலங்குகளின் உடல்களில் இருந்து நீக்கியதன் மூலம் அவை வாழும் காலம் நீடித்ததாக முந்தைய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

புகைபிடித்தல், வைட்டமின் பற்றாக்குறை, உடல் பருமன் உள்ளிட்ட காரணங்களால் Telomeres குறைந்து முதுமை வேகமாக அடைவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

மற்ற செய்திகள்