நாங்க 'அட்டேக்' பண்றத நிறுத்த போறதில்ல...! 'இஸ்ரேல் பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு...' - அதிர்ச்சியின் உச்சக்கட்டத்தில் உலகநாடுகள்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மீண்டும் தாக்குதல்கள் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு பாலஸ்தீன நாட்டிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாங்க 'அட்டேக்' பண்றத நிறுத்த போறதில்ல...! 'இஸ்ரேல் பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு...' - அதிர்ச்சியின் உச்சக்கட்டத்தில் உலகநாடுகள்...!

இஸ்ரேல் ராணுவம் மற்றும் பாலஸ்தீன நாட்டு போராளி குழுக்களுக்கும் இடையே பல வருடங்களாக மோதல் நடைபெற்று வருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக பாலஸ்தீன பகுதிகளை ஆக்கிரமித்து வரும் இஸ்ரேல் நாட்டிற்கு உள்ளூர் நாட்டு மக்கள் போராளிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதோடு கடந்த 7 நாட்களாக இஸ்ரேல் ராணுவத்திற்கும், பாலஸ்தீன ஹமாஸ் உள்ளிட்ட போராளி குழுக்களுக்கும் மோதல் நடைபெற்று வருகிறது.

சில நாட்களுக்கு முன் ஹமாஸ் போராளிகள், ஜெருசலேமில் உள்ள மஸ்ஜிதுல் அக்சாவில் இருந்து பாலஸ்தீனியர்களை விரட்டிய இஸ்ரேல் ராணுவத்தின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் டெல் அவிவ் மற்றும் பீர்ஷெபா (Beersheba) நகரங்களின் மீது  ராக்கெட்டுகளை வீசினர்.

இதனால் கடுப்பான இஸ்ரேல் ராணுவமோ பதிலுக்கு காசா நிலப்பகுதி மீதி சரமாரியாக வான்வழி தாக்குதல்களை நடத்தியது. அப்போது துரதிஷ்டவசமாக 41 குழந்தைகள் உள்பட பாலஸ்தீனர்கள் 149 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் உலகையே மீண்டும் திரும்பிபார்க்க வைத்துள்ளது எனலாம். இதில் கேரளாவை சேர்ந்த பெண்ணும் இறந்துள்ளார்.

அதற்கு பதிலடியாக மீண்டும் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் 10 பேர் கொல்லப்பட்டனர். அதோடு இன்று (16-05-2021) காலை காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவரின் வீடு தரைமட்டமாக்கப்பட்டது. மீண்டும் மீண்டும் இரு பக்கமும் கொலைவெறி தாக்குதலோடு செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ, தொலைக்காட்சியில் அளித்த பேட்டி ஒன்றில் காசா மீதான தாக்குதல் தொடரும் என கூறினார்.

இஸ்ரேல் பிரதமரின் இந்த பேட்டி உலகநாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது எனலாம். இதற்கு முன்பும் மோதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா. ஐ.நா மற்றும் எகிப்து தூதர்கள் நடத்திய பேச்சுவார்த்தைகள் எந்த பலனும் தராத நிலையில், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அவரசமாக கூடி நிலைமையை பற்றி விவாதிக்க உள்ளது.

Israel Prime Minister said the attack on Gaza will continue

இந்த மோதல் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மிகுந்த கவலை தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

எந்த ஒரு செயலுக்கும் வன்முறை நல்ல தீர்வாக இருக்காது என்பதற்கு, இதற்கு முன்பு நடந்த இன அழிப்பும், உலக யுத்தங்களும் சாட்சியாக இருக்கும் சமயத்தில் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடந்து கொண்டு இருக்கின்றன.

மற்ற செய்திகள்