'எங்களிடம் சிறந்த தடுப்பூசி ஒன்று கைவசம் உள்ளது'... 'எப்போது சோதனை?'... 'அறிவிப்பு வெளியிட்டுள்ள நாடு!'...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனாவுக்கு தங்களிடம் சிறந்த தடுப்பூசி ஒன்று கைவசம் உள்ளதாக இஸ்ரேல் உயிரியல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் பேராசிரியர் ஷபிரா தெரிவித்துள்ளார்.

'எங்களிடம் சிறந்த தடுப்பூசி ஒன்று கைவசம் உள்ளது'... 'எப்போது சோதனை?'... 'அறிவிப்பு வெளியிட்டுள்ள நாடு!'...

கொரோனா வைரஸ் பாதிப்புக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் பலவும் இறங்கியுள்ள நிலையில், இஸ்ரேலும் தடுப்பூசிக்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், இஸ்ரேலின் ராணுவ மந்திரி பென்னி காண்ட்ஸ் ‘ஐஐபிஆர்’ என அழைக்கப்படும் இஸ்ரேல் உயிரியல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு நேற்று சென்று அதன் இயக்குனர் பேராசிரியர் ஷபிராவை சந்தித்து தடுப்பூசி உருவாக்கும் திட்டத்தின் தற்போதைய நிலை குறித்துக் கேட்டறிந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து பேராசிரியர் ஷபிரா வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்களிடம் கொரோனாவுக்கு சிறந்த தடுப்பூசி ஒன்று கைவசம் உள்ளது. குறிப்பிட்ட கால அட்டவணையின் அடிப்படையில் தடுப்பூசி கடந்து செல்ல வேண்டிய ஒழுங்குமுறை செயல்முறைகள் உள்ளன. இலையுதிர் கால விடுமுறைக்கு பின்னர் நாங்கள் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் சோதனைகளை தொடங்க உள்ளோம்" எனக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்