அவர் 'இறந்ததையே' 2 நாள் கழிச்சு தான் சொன்னாங்க... ஒருவேளை இப்டி இருக்குமோ?... 'அந்த' நாட்டின் மீது சந்தேகம் எழுப்பும் வல்லுநர்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்நேற்று முழுவதும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் உடல்நிலை தொடர்பான தகவல்கள் வெளியாகி உலக நாடுகளை அதிர வைத்தது. கடந்த 11-ம் தேதி முதல் கிம் எந்தவொரு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை என்பதால், அவர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. மேலும் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் அண்டை நாடான தென் கொரியா இந்த தகவல்களில் உண்மையில்லை என மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டது.
இந்த நிலையில் அமெரிக்கா ஒருவேளை புரளி கிளப்பி இருக்கலாம் என சர்வதேச வல்லுநர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக அறியப்படும் கிம் இதுவரை அமெரிக்காவின் வலையில் சிக்கவில்லை. மேலும் அவ்வப்போது ஏவுகணை சோதனைகள் நடத்தி அமெரிக்காவுக்கும் தலைவலியை உண்டாக்கி வருகிறார். இதனால் அவரது நடவடிக்கைகளை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது. கடந்த சில நாட்களாக அவர் வெளியில் வரவில்லை என்பதால் இதுபோல வதந்தி எழுப்பினால் அவர் வெளிப்படுவார் என்ற நோக்கத்தில் அமெரிக்கா இதை செய்திருக்கலாம் என்று சர்வதேச நிபுணர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.
மறுபுறம் கிம், சீனாவுடன் சேர்ந்து சதித்திட்டம் எதுவும் தீட்டுகிறாரா? என்ற குழப்பத்தில் அமெரிக்கா இருக்கிறதாம். வடகொரியாவின் முன்னாள் தலைவரும் கிம் ஜாங்-ன் தந்தையுமான கிம் ஜாங் இல் கடந்த 2011-ம் ஆண்டு மறைந்த தகவலானது, இரண்டு நாட்களுக்கு பின்னர் வடகொரியா அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்னரே அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு தெரியவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் கொரோனாவுக்கு மத்தியிலும் வடகொரியாவின் நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரமாக கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது.