"20 வருஷமாச்சு,, அது தொலைஞ்சு போய்",,.. 'பர்ஸை' பறிகொடுத்த நபருக்கு 'ஜஸ்ட் 24 மணி' நேரத்தில் சர்ப்ரைஸ் கொடுத்த 'போலீஸ்'!!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அயர்லாந்து நாட்டில் 20 ஆண்டுகளுக்கு முன் தொலைந்து போன நபரின் பர்ஸ் ஒன்று அவரிடம் மீண்டும் வந்து சேர்ந்துள்ளது.

"20 வருஷமாச்சு,, அது தொலைஞ்சு போய்",,.. 'பர்ஸை' பறிகொடுத்த நபருக்கு 'ஜஸ்ட் 24 மணி' நேரத்தில் சர்ப்ரைஸ் கொடுத்த 'போலீஸ்'!!!

அயர்லாந்து நாட்டின் கவுண்டி டப்ளின் என்னும் பகுதியில், பர்ஸ் ஒன்றை நபர் ஒருவர் போலீஸ் அதிகாரிகளிடம் கொடுத்துள்ளார். தொடர்ந்து, அந்த பர்ஸின் உரிமையாளர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவர்களின் விசாரணையில் பல சுவாரஸ்யமான தகவல்கள் இடம்பெற்றிருந்தது.

அந்த பர்ஸுக்குள், 2001 ஆம் ஆண்டிலுள்ள மாணவர் ஒருவரின் ஐ.டி கார்டு இடம்பெற்றிருந்தது. அதனுடன் விசா கிரெடிட் கார்டும் இருந்துள்ளது. அதிலிருந்த தகவலை கொண்டு போலீசார் பர்ஸின் உரிமையாளர் முகவரியை கண்டுபிடித்தனர்.  அதன் பின், உரிமையாளரிடம் பர்ஸ் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இது தொடர்பான பதிவு ஒன்றை போலீசார் தங்களது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். '20 ஆண்டுகள் நீடித்த மர்மம், 24 மணி நேரத்தில் தீர்க்கப்பட்டது' என அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தனர்.

இது தொடர்பான பதிவு அதிகம் வைரலான நிலையில், பலர் இந்த பதிவிற்கு கீழ் நகைச்சுவையான கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். 

மற்ற செய்திகள்