"பயங்கரவாதின்னா இப்படித்தான் இருக்கணும்... பயங்கரம்மா!..." "என்னா வெய்ட்டு... முடிஞ்சா தூக்கிப்பாரு..."

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவராக செயல்பட்டு வந்த 250 கிலோ எடை கொண்ட பயங்கரவாதியை ஈராக் போலீசார் கைது செய்துள்ளனர். அவரை காரில் ஏற்றி செல்ல முடியாததால் சரக்கு வாகனத்தில் அழைத்து சென்றனர்.

"பயங்கரவாதின்னா இப்படித்தான் இருக்கணும்... பயங்கரம்மா!..." "என்னா வெய்ட்டு... முடிஞ்சா தூக்கிப்பாரு..."

ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வரும் ஈராக்கில்  அவர்களை ஒடுக்குவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்க படைகளும் அங்கு முகாமிட்டு பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனாலும் அங்கு பயங்கரவாதிகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. அவர்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராக மிரட்டல்கள் விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் அங்கு ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவராக செயல்பட்டு வந்த அபு அப்துல் பாரி என்பவர், அடிக்கடி இதுபோன்ற மிரட்டல்களை விடுத்து வந்தார். அவரை ஈராக் பாதுகாப்பு படையை சேர்ந்த ஸ்வாட் குழு மொசூல் நகரில் சுற்றிவளைத்து கைது செய்தது.

சுமார் 250 கிலோ எடைகொண்ட அவர் எழுந்து கூட நடக்க முடியாத நிலையில் இருந்ததைக் கண்டு ஈராக் பாதுகாப்புப் படையினர் ஆச்சரியமடைந்தனர். அவரை காரில் ஏற்றி செல்ல முடியாததால், சரக்கு வாகனத்தில் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.

ஐ.எஸ். அமைப்பினருக்கு ஆதரவாக செயல்படாத மதபோதகர்களை கொல்வதற்கான உத்தரவுகளை அபு அப்துல் பாரி பிறப்பித்துள்ளார் என ஈராக் போலீசார் தெரிவித்துள்ளனர்.

IRAQ, TERRORIST, WEIGHT 250 KG, IS ORGANIZATION, SWAT