'நீ 35 வயசுக்காரன காதலிப்ப, நான் ஓகே சொல்லணுமா'?... 'அசந்து தூங்கிய செல்ல மகள்'... நடு ராத்திரி நடந்த படு பாதக சம்பவம்!
முகப்பு > செய்திகள் > உலகம்சமூகத்தில் சில நேரம் நடக்கும் சம்பவங்கள், சிலரை அவர்கள் மனிதர்கள் தானா என நம்மில் பலரை யோசிக்க வைக்கும். அந்த வகையில் தற்போது நடந்துள்ள சம்பவம், பலரது ஈரக்கொலையை நடுங்கச் செய்யும் அளவிற்குக் கோரமான சம்பவமாகும்.
ஈரானின் வடக்கு மாகாணமான கிலனில் உள்ள தலேஷ் நகரைச் சேர்ந்த 13 வயது சிறுமி அஷ்ரஃபி. காதலில் விழுந்த இந்த சிறுமி, தான் காதலிக்கும் நபருடன் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். தனது மகள் காணாமல் போனது குறித்து காவல்நிலையத்தில் அந்த சிறுமியின் தந்தை புகார் செய்துள்ளார். இதையடுத்து சிறுமியைக் கண்டுபிடித்த காவல்துறையினர், அவரது தந்தையிடம் சிறுமியை ஒப்படைத்துள்ளார்கள்.
இந்நிலையில் அஷ்ரஃபி காதலித்த நபர் 35 வயதுடையவர் என அங்குள்ள ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தனது தந்தையிடம் அந்த சிறுமி கூறியதாகவும், அதற்கு அவரது தந்தை சம்மதிக்கவில்லை எனவும் அந்த ஊடகங்கள் கூறியுள்ளன. இதற்கிடையே அஷ்ரஃபியை அவரது வீட்டில் காவல்துறையினர் ஒப்படைத்த போது, அதற்கு மறுப்பு தெரிவித்த அஷ்ரஃபி, எனக்கு வீட்டில் பாதுகாப்பு இல்லை என காவல்துறையினரிடம் கூறியுள்ளார். ஆனால் அஷ்ரஃபி கூறியதை ஏற்காத காவல்துறையினர், அவரை அவரது தந்தையிடம் ஒப்படைத்துவிட்டு அவர்கள் சென்று விட்டார்கள்.
இந்நிலையில் இரவில் அஷ்ரஃபி அசந்து தூங்கிக் கொண்டிருந்த நிலையில், தான் வளர்த்த செல்ல மகள் என்றும் பாராமல், அவரது தந்தை அஷ்ரஃபியின் தலையை அரிவாளால் கொடூரமாக வெட்டி எடுத்து கொலை செய்துள்ளார். மகளைக் கொலை செய்த பின்னர், தந்தை கையில் கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதத்துடன் காவல் நிலையத்திற்குச் சென்று தான் செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் ஈரானை உலுக்கியுள்ள நிலையில், இந்த கொடூர கொலையைக் கவுரவக்கொலை என, உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
தற்போது மகளைக் கொலை செய்ததாக அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மகளின் பாதுகாவலர் என்பதால், ஈரானின் இஸ்லாமியத் தண்டனைச் சட்டத்தின் அடிப்படையில், தந்தை கடுமையான தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது. இந்த கொடூர கொலையை அங்குள்ள பலரும் சமூகவலைத்தளங்களில் கடுமையாகக் கண்டித்துள்ளார்கள்.
இந்நிலையில் இந்த வழக்கின் விவரங்கள் அனைத்தும் சட்ட நடைமுறைக்குப் பின்னர் பகிரங்கப்படுத்தப்படும் என தலேஷின் ஆளுநர் கூறினார். தங்களது குழந்தைகள் தடம் மாறிப் போனால் அவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய இடத்தில் இருக்கும் பெற்றோரே இது போன்ற கொடூரச் செயலில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ளவே முடியாது எனவும், இது போன்ற நபர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் கண்டன குரல்கள் எழுந்துள்ளன.
மற்ற செய்திகள்