வல்லரசு நாடான 'அமெரிக்காவின்' தடையை மீறி... ஈரானுக்கு 'மருத்துவ உதவி' வழங்கிய நாடுகள் ... இனி என்ன நடக்கும்?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வல்லரசு நாடான அமெரிக்காவின் பொருளாதார தடையை மீறி ஈரானுக்கு பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகள் மருத்துவ உதவி வழங்கி இருக்கின்றன.

வல்லரசு நாடான 'அமெரிக்காவின்' தடையை மீறி... ஈரானுக்கு 'மருத்துவ உதவி' வழங்கிய நாடுகள் ... இனி என்ன நடக்கும்?

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸால் ஈரான் நாடு கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையால் அந்நாடு பொருளாதார ரீதியாக பாதிப்படைந்திருக்கும் நிலையில் தற்போது கொரோனா அந்நாட்டை வெகுவாக ஆட்டிப்படைத்து வருகிறது. இதுவரை சுமார் 3000 பேர் அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். சுமார் 48 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

இந்த நிலையில் ஈரானுக்கு பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகள் அமெரிக்காவின் பொருளாதார தடையை மீறி மருத்துவ உதவிகள் வழங்கி இருக்கின்றன. இவை அனைத்துமே அமெரிக்காவின் நட்பு நாடுகள் என்பதால் தற்போது இந்த உதவி உலகம் முழுவதும் வெகுவாக கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக அமெரிக்கா, ஈரானுக்கு உதவி வழங்க முன்வந்த போது ஈரான் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.