எப்படி 85 ஸ்பூனும் உடலோடு ஒட்டி இருக்கு? எந்த பசையும் இல்ல.. காந்த சக்தியும் இல்ல.. வியக்க வைக்கும் சாதனை மனிதன்

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஈரான்: நாம் அனைவரும் சாப்பாடு சாப்பிட மட்டுமே ஸ்பூனை பயன்பற்றுவோம் ஆனால் ஈரானைச் சேர்ந்த நபர் அதனைக் கொண்டே கின்னஸ் சாதனை செய்துள்ளார்.

எப்படி 85 ஸ்பூனும் உடலோடு ஒட்டி இருக்கு? எந்த பசையும் இல்ல.. காந்த சக்தியும் இல்ல.. வியக்க வைக்கும் சாதனை மனிதன்

"மாப்பிள்ளை செஞ்சது சுத்தமா புடிக்கல.." திருமண மேடையில் மணமகள் எடுத்த அதிர்ச்சி முடிவு.. இது எல்லாம் ஒரு குத்தமா மா??

உலக சாதனை புத்தகமான கின்னஸ் சாதனை புத்தகத்தில் நம்முடைய பெயர் இடம்பெற என்றால் நாம் ஏதாவது வித்தியாசமாக செய்துக் காட்ட வேன்டும். இல்லையென்றால் இதற்கு முன் யாராவது செய்த சாதனையை நாம் முறியடிக்க வேண்டும். இந்த நிலையில் ஈரானைச் சேர்ந்த நபர் ஒருவர் வெறும் ஸ்பூனை கொண்டு கின்ன்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

ட்ரெண்டிங் ஆகும் வீடியோ:

டிவீட்டர் முழுவதும் அவரது வீடியோ தான் தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது. என்னடா இது ஸ்பூனை கொண்டு சாதனையா என்று நினைப்பவர்களுக்கு இவரின் செயல் ஒரு சிம்ம சொப்பனமாகவே தெரியும். 50 வயதான இவர் பல வருடங்களாக கடினமான முயற்சியும், பயிற்சியும் செய்து தன் உடம்பில் சுமார் 85 ஸ்பூன்களை சமநிலை படுத்தியுள்ளார்.

சிறுவனாகவே இருக்கும்போதே தொடங்கிய பயிற்சி:

ஈரான் நாட்டை சேர்ந்த அபோல்பாசல் சபர் மொக்தாரி சிறுவயது முதலே தன்னுடைய உடலில் ஸ்பூனை வைத்து சமன் செய்வதில் பயிற்சி பெற்று வருகிறார். சிறுவனாக இருக்கும் போது ஒருமுறை மொக்தாரி உடலில் ஸ்பூனை வைத்து பேலன்ஸ் செய்ய முடிந்ததை கவனித்தார். அதன் பின்னர் பல வருட பயிற்சி மற்றும் திறமை மூலமாக, உடல் முழுவதும் ஸ்பூனை நிலையாக நிற்க வைத்து, அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

திறமையை உலகம் பார்க்க வேண்டும்:

iran man balance 85 spoons in his body guinness record

தன்னுடைய திறமையை உலகமே பார்க்கவேண்டும் என்று நினைத்த அபோல்பாசல் மொக்தாரி, கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்கு முன் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மார்கோஸ் ரூயிஸ் செபாலோஸ் என்பவர் 64 ஸ்பூன்களை உடலில் சமன் செய்து தான் முந்தைய கின்னஸ் சாதனையாக இருந்தது.

கின்னஸ் சாதனை:

அதனை கடக்கும் விதமாக மொக்தாரி, தன்னுடைய உடலில் 85 ஸ்பூன்களை சமநிலை செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அவரின் உடலில் ஸ்பூன் அடுக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. தன்னால் ஸ்பூனை மட்டும் அல்ல பிளாஸ்டிக், கிளாஸ், பழங்கள், கல், மரம் என எதை வேண்டுமானாலும் தனது உடலில் ஒட்டிக்கொள்ள முடியும் எனவும் கூறியுள்ளார்.

முன்னாள் காதலிக்கு காதலன் உருவாக்கிய பேக் ஐடி.. நண்பரை வைத்து காதலி செய்த சதி திட்டம்!

IRAN MAN, BALANCE 85 SPOONS, GUINNESS RECORD, ஈரான், கின்னஸ் சாதனை

மற்ற செய்திகள்