அமெரிக்க அதிபர் டிரம்புக்கு 'கைது வாரண்ட்'!.. சரியான டைமிங்!.. ஸ்கெட்ச் போட்டு பழிவாங்க துடிக்கும் 'எதிரி'கள்!.. என்ன செய்யப்போகிறார் டிரம்ப்?
முகப்பு > செய்திகள் > உலகம்ஈரானின் குவாட்ஸ் படையின் தளபதி சுலைமானி கொலை தொடர்பாக டிரம்பிற்கு ஈராக் நீதி மன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
கடந்த ஜனவரி 3-ம் தேதி பாக்தாத்தில் ஈரானின் குவாட்ஸ் படையின் தளபதி காசிம் சுலைமானி, துணைத் தளபதி அபு மெஹதி முஹென்திஸ் உள்ளிட்டவர்கள் அமெரிக்காவின் ஆள் இல்லா ராணுவ விமானம் மூலம் குண்டுவீசி கொல்லப்பட்டனர்.
இந்த விவகாரத்தில் பழிக்குப் பழி வாங்குவோம் என்று முழக்கமிட்ட ஈரான் அரசு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை பயங்கரவாதியாக அறிவித்தது.
மேலும், பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் ஈரான் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. இதில் கொல்லப்பட்ட அமெரிக்க ராணுவ வீரர்கள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில், ஈரான் தளபதி சுலைமானி உள்ளிட்ட ராணுவத்தினரைக் கொலை செய்ததில் 40 அமெரிக்க அதிகாரிகளுக்குப் பங்கு உண்டு என்பதை ஈரான் ராணுவம் கண்டறிந்துள்ளது. இதையடுத்து, ஈரான் நாட்டு நீதிமன்றம் ஜனாதிபதி டிரம்ப் உள்ளிட்ட 40 பேரைக் கைது செய்ய வலியுறுத்தி ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நிலையில் சுலைமானி கொல்லப்பட்டது தொடர்பாக டிரம்பிற்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதாக ஈராக்கின் நீதித்துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலை விசாரிக்கும் பாக்தாத்தின் விசாரணை நீதிமன்றம் இந்த கைது வாரண்ட் உத்தரவை பிறப்பித்து உள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள் கலவரம் செய்து வரும் நிலையில், ஈரான் நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு டிரம்புக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்