"உலக நாடுகள் எதிர்ப்பை மீறியும் சண்டை போட்டுட்டு இருக்கீங்க".. ‘முக்கிய பதவி பறிப்பு’.. புதினுக்கு ஷாக் கொடுத்த அமைப்பு..!
முகப்பு > செய்திகள் > உலகம்உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஜூடோ கூட்டமைப்பு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த வாரம் போர் தொடுத்தது. அதனால் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து 4-வது நாளாக போர் நீடித்து வருகிறது. இதில் உக்ரைனில் பல்வேறு நகரங்களில் ரஷ்யா வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. அதில் கீவ் நகரின் குடியிருப்பு பகுதிகளை ரஷ்ய படைகள் நேற்று தாக்கின. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் கீவ் நகரில் இருந்து வெளியேறி வருகின்றனர்.
உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருவதால் இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடையை விதித்துள்ளன. ஆனாலும் போரை நிறுத்தும் முடிவில் இருந்து ரஷ்யா பின்வாங்காமல் இருந்து வருகிறது.
இந்த நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சர்வதேச ஜூடோ கூட்டமைப்பின் (International Judo Federation) கௌரவத் தவைவர் மற்றும் தூதுவர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக விளையாட்டு நிர்வாகக் குழு அறிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் முன்பு அந்நாட்டின் உளவு அமைப்பான கே.ஜி.பி.யில் முக்கிய பொறுப்பை வகித்தவர். அவர் தற்காப்பு கலையிலும் வல்லவராக திகழ்ந்து வந்தார்.
அதனால் கடந்த 2008-ம் ஆண்டு முதல் புதின் சர்வதேச ஜூடோ கூட்டமைப்பின் கௌவரத் தலைவராக இருந்து வந்தார். இதனை அடுத்து 2014-ம் ஆண்டு ஜூடோ விளையாட்டின் மிக உயர்ந்த நிலையான 9-வது டான் விருதையும் புதின் பெற்றுள்ளார். இந்த சூழலில் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறியும் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவதால், அவரை கௌவரத் தலைவர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளதாக சர்வதேச ஜூடோ கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்